கோலார் தங்க வயலில் பதற்றம்
கோலார்:
கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல் சுரங்கப் பகுதியில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 2தொழிலாளர்கள் பயங்கரமாக தாக்கப்பட்டனர். இதையடுத்து அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
நூற்றாண்டு வயதான கோலார் தங்க வயல் விரைவில் மூடப்படவுள்ளது. இதை தொழிலாளர்கள் எதிர்த்துவருகின்றனர். சுரங்கத்தை மூடுவதை எதிர்த்து, கடந்த ஐந்து நாட்களாக தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் ஒரு பிரிவு தொழிலாளர்கள் இதில் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில், உண்ணாவிரதம் இருந்த வேணு, ரவி ஆகிய இரு தொழிலாளர்கள் புதன்கிழமை கொடூரமாகத்தாக்கப்பட்டனர். எதிர்த்தரப்பு தொழிலாளர்களே அவர்களைத் தாக்கியதாகத் தெரிகிறது.
இதையடுத்து அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை எழுந்தது. தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு,மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலகம் முன்பு குவிந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
தாக்குதலில் காயமடைந்த ரவி கோலார் தங்க வயல் மருத்துவமனையிலும், வேணு, பெங்களூர் நிமான்ஸ்மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
போலீஸ் ஐஜி. அச்சுத ராவ் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். கூடுதல் போலீஸ் படையும் அங்குகுவிக்கப்பட்டுள்ளது.
சுரங்க ஊழியர்கள் தாக்கப்பட்டதையடுத்து, தங்க வயல் பகுதி முழுவதிலும் வர்த்தக நிலையங்கள், தியேட்டர்கள்,வங்கிகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு பந்த் அனுசரிக்கப்பட்டது.
கோலார் தங்க வயல் ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications