ஆங்கிலோ பிரெஞ்சு மில்: பாண்டி. முதல்வர் கோரிக்கை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் உள்ள ஆங்கிலோ பிரெஞ்சு மில்லின் பிரச்சனைகளை அரசியலாக்க வேண்டாம் என்று அரசியல்தலைவர்களுக்கும், வர்த்தக தொழிற்சங்கங்களுக்கும் பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் இதுகுறித்து நிருபர்களிடம் கூறுகையில், பாண்டிச்சேரியில் உள்ள ஆங்கிலோ, பிரெஞ்சு மில்லில் பலபிரச்சனைகள் உள்ளன. இந்தப் பிரச்சனைகள் மில் தொழிலாளர்களுக்கும், உரிமையாளர்களுக்கும் மட்டுமேசம்பந்தப்பட்டது. இதை அரசியலாக்கும் முயற்சியில் அரசியல் கட்சித் தலைவர்கள் யாரும் ஈடுபட வேண்டாம்.
கடந்த வருடம் இந்த மில்லின் வருமானம் ரூ 48.57 கோடியாக இருந்தது. இந்த வருடம் மில்லின் வருமானம் ரூ62.24 கோடியைத் தொட்டுள்ளது. அதாவது வருமானம் 28.15 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த வருட ஏற்றுமதிரூ 15.57 கோடியாக இருந்தது. இந்த வருட ஏற்றுமதி ரூ 18.99 கோடியாக அதிகரித்துள்ளது.
ரஷ்யா, பெல்ஜியம், ஸ்விட்சர்லாந்து, அயர்லாந்து மற்றும் சிங்கப்பூரிலிருந்து மில்லுக்கு ஆர்டர்கள் வந்துகுவிகின்றன. ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு நாடுகளிலிருந்தும் ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன என்றார்சண்முகம்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications