ஏர் இந்தியா குண்டுவெடிப்பு: குற்றவாளிகளுக்கு ஜாமீன் கிடைக்குமா?
வான்கூவர்:
கனடாவில், 1985 ம் வருடம் ஏர் இந்தியா ஜெட் விமானம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதாகியுள்ள 2 முக்கியக்குற்றவாளிகளுக்கு வியாழக்கிழமை ஜாமீன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டிஷ் கொலம்பியா சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. வழக்கில் ரிபுடாமன் சிங் மாலிக் மற்றும் அஜப் சிங் பாக்ரிஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருவரும் வியாழக்கிழமை கோர்ட்டுக்குக் கொண்டு வரப்படுகின்றனர். அப்போது தங்களை ஜாமீனில்விடக் கோரி விண்ணப்பிக்கலாம் என்று தெரிகிறது.
மாலிக் (53) மற்றும் பாக்ரி (51) அகியோர் வான்கூவர் அருகே ஏர் இந்தியா ஜெட் விமானத்தைக் குண்டு வைத்து தகர்த்தது (இதில் 329 பேர்இறந்தனர்) மற்றும் டோக்கியோ விமான நிலையத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவம் (இதில் 2 பேர் கொல்லப்பட்டனர்) ஆகியவற்றில் முக்கியக்குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஏர் இந்தியா குண்டுவெடிப்புச் சம்பவத்துக்குப் பின்னணியில் சீக்கியத் தீவிரவாதிகள் இருக்கக் கூடும் என்று போலீஸார் நினைத்தனர். கனடாவின் மேற்குப்பகுதியில் அதிகமாக சீக்கிய இனத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். மாலிக்கும், பாக்ரியும் அதே பகுதியைச் சேர்ந்த சீக்கியர்கள். இவர்களேகுண்டுவெடிப்புச் சம்பவத்துக்குப் பின்னணியில் இருப்பவர்கள் என்ற சந்தேகம் இருந்தது.
இதையடுத்து இருவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications