நாடு கடத்தலை எதிர்த்து போராடும் புலிகள் அனுதாபி
டொரான்டோ:
விடுதலைப்புலிகளுடன் தொடர்பு இருப்பதால் நாடு கடத்தப்பட வேண்டும் என்று கனடா குடியேற்றத்துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து 5 ஆண்டுகளாகநீதிமன்றத்தில் போராடி வருகிறார் அந்நாட்டில் குடியேறியுள்ள விடுதலைப் புலிகள் அனுதாபி.
குடியேற்றத்துறை உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்துள்ள இலங்கையைச் சேர்ந்த சுரேஷ் மாணிக்கவாசகம், தான் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டால்,அங்கு கொடுமைப்படுத்தப்படலாம் என்று தனது அப்பீலில் கூறியுள்ளார்.
சுரேஷ் மாணிக்கவாசகத்திற்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக கனடா உளவுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். சுரேஷ், விடுதலைப்புலிகளுக்காக நிதி வசூலிக்கவே கனடா வந்துள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆனால் இதை சுரேஷ் மறுக்கிறார். நான் இலங்கையில் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டேன். மீண்டும் அங்கு செல்வதை விரும்பவில்லை. என்னைஇலங்கைக்கு நாடு கடத்த வேண்டும் என்று குடியேற்றத்துறை பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட் பரிசீலனை செய்ய வேண்டும் என்று அப்பீல் மனுவில்சுரேஷ் கூறியுள்ளர். 5 ஆண்டுகளாக இதுகுறித்து நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
சுரேஷூக்கு ஆதரவாக ஜெனீவாவில் உள்ள ஐ.நா. அகதிகள் தூதரகம், கனடா அகதிகள் கவுன்சில் உள்பட 7 அமைப்புக்கள் குரல் கொடுத்துள்ளன.சுரேஷூக்கு ஆதரவாக 7 அமைப்புகளும் தலா 20 பக்க மனுவை சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பியுள்ளன. சுப்ரீம் கோர்ட் இந்த மனுக்கள் குறித்துவிசாரணை நடத்தி வருகிறது.
1990ம் ஆண்டு சுரேஷ் கனடாவுக்கு வந்தார். அப்போது அவருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது. ஐந்தாண்டுகள் அகதியாக வாழ்ந்து வந்தார். பின்னர்அவருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு உள்ளது எனக் காரணம் கூறி அவர் கைது செய்யப்பட்டார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications