ரூ. 27 லட்சம் மோசடி செய்தவர் கைது
கோவை:
சென்னையில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி, ரூ. 27 லட்ச ரூபாயை செக்கில் எடுத்துக் கொண்டுதலைமறைவான ஊழியரைக் கோவையில் போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் மேலாளராகப் பணியாற்றிவந்தவர் சசிக்குமார் (28).
நிறுவனத்தின் நம்பிக்கைக்குரிய ஊழியராக இருந்தார். இதனால் கம்பெனியின் நிர்வாக இயக்குநர், நிறுவனத்தின்செலவுக்காக தொகை நிரப்பப்படாத, கையெழுத்திட்ட காசோலையைக் கொடுத்தார். பின்னர் அவர்வெளிநாட்டிற்குச் சென்று விட்டார்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நிறுவன செக் மூலம் ரூ. 27 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவாகிவிட்டார். வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த நிர்வாக இயக்குநருக்கு , செக் மோசடி தெரிய வந்தது. இதையடுத்துபோலீசில் புகார் கொடுத்தார்.
இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் மாநிலம் முழுவதும் சசிக்குமார் பற்றிய தகவல்களைஅனுப்பினர். அப்போது கோவையில் ஒருவர் லாட்ஜில் தங்கியிருப்பது தெரிய வந்தது. புதிய மாடிஸ் காருடன்அவர் வலம் வந்தது குறித்து அறிந்த போலீசார் அவரைக் கைது செய்தனர்.
அவரது காரைப் பறிமுதல் செய்து, அவர் தங்கியிருந்த அறையை சோதனை செய்தனர். அங்கிருந்து ரூ. 18லட்சத்தைக் கைப்பற்றினர். மீதமுள்ள பணத்தை அவர் செலவு செய்து விட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications