மனைவியை விவாகரத்து செய்கிறார் பெக்கர்
ஹம்பர்க்:
ஜெர்மனி டென்னிஸ் நட்சத்திரம் போரிஸ் பெக்கர் தனது மனைவியை விவாகரத்துசெய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுசெய்துள்ளார்.
பெக்கருக்கும், அவரது மனைவி பார்பராவுக்கும் இடையே திருமணம் நடந்து 6ஆண்டுளாகிறது. சில நாட்களுக்கு முன்புதான் இருவரும் பிரியப் போவதாகசெய்திகள் வந்தன. தற்போது விவாகரத்து கோரி நீதிமன்றத்தை பெக்கர்அணுகியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
ஜெர்மனி வாரப்பத்திரிகையொன்றில் இதுகுறித்து வெளியாகியுள்ள செய்தியில்,டிசம்பர் 15-ம் தேதி பெக்கர் விவாகரத்து மனுவைத் தாக்கல் செய்தார். இதை மியூனிச்நீதிமன்ற செய்தித்தொடர்பாளர் மைக்கேல் உறுதிப்படுத்தியுள்ளார் என்றுகூறப்பட்டிருந்தது.
1993-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி பெக்கரும், பார்பராவும் லிமான் நகரில்திருமணம் செய்து கொண்டனர். அதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் அவர்களது முதல்குழந்தை நோயா காபிரியேல் பிறந்திருந்தது.
இந்த மாதம் 5-ம் தேதி பெக்கர் வெளியிட்ட அறிவிப்பில், அவரும், பார்பராவும்பிரியப் போவதாக அறிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications