கிறிஸ்துமஸ், புத்தாண்டு: உஷார் நிலையில் போலீஸ்
சென்னை:
கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி சென்னையில் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கபோலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
குடி போதையில் வாகனம் ஒட்டினாலோ, ஈவ் டீசிங் செய்தாலோ கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் காளிமுத்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை நகர போலீஸ் கமிஷனர் காளிமுத்து நிருபர்களிடம் பேசினார்:
சென்னை நகரில் கம்யூட்டர் பயிற்சி நிறுவனம் நடத்துபவ
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தையொட்டி, சென்னையில் பாதுகாப்புபலப்படுத்தப்படும். 24-ம் தேதி மாலையில் இருந்தே கிறிஸ்தவ ஆலயங்களுக்குபாதுகாப்பு போடப்படும்.
கிறிஸ்துமஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க 6000 போலீஸார்நியமிக்கப்படுவார்கள். இதே போல புத்தாண்டு தினமான ஜனவரி 1-ம் தேதிபத்தாயிரம் போலீஸார் சென்னையில் பாதுகாப்பு பணிகளை கவனிப்பார்கள்.பாதுகாப்பு முழுவிபரம் பின்னர் தெரிவிக்கப்படும்.
புத்தாண்டு தினத்தன்று இந்த ஆண்டு சில புதிய நடைமுறைகளை கண்டிப்பாககடைபிடிக்க உள்ளோம். மோட்டார் சைக்கிள் போன்ற இரண்டு சக்கர வாகனஓட்டுனர்கள் குடி போதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது.
புத்தாண்டு வாழ்த்து என்ற போர்வையில் பெண்களை கிண்டல் செய்யக்கூடாது.மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
புத்தாண்டு கேக் வெட்டுகிறோம் என்று சில நிறுவனங்கள் நடு ரோட்டில் கேக் வெட்டும்நிகழ்ச்சிக்கு கடந்த ஆண்டு ஏற்பாடு செய்திருந்தன. இந்த ஆண்டு நடு ரோட்டில் அதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கிடையாது.
புத்தாண்டையொட்டி மெரீனா பீச், எலியட்ஸ் பீச் போன்ற இடங்களில் கடலில்குளிப்பவர்களை போலீஸார் தீவிரமாக கண்காணிப்பார்கள். குதிரைப்படைபோலீஸார் இதற்காக பயன்படுத்தப்படுவார்கள்.
எலியட்ஸ் பீச் ரோடு ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்.மொத்தத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார் அவர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications