புலிகள் சண்டை நிறுத்தம் அறிவிப்பு
கொழும்பு:
இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் சமரசப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வசதியாக விடுதலைப்புலிகள் சண்டைநிறுத்த அறிவிப்பைவியாழக்கிழமை வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில் தனி ஈழம் கேட்டுப் போராடி வரும் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே கடந்த 17 ஆண்டுகளாகத் தொடர்ந்து சண்டைநடந்து வருகிறது. இந்தச் சண்டையை முடிவுக்குக் கொண்டு வர நார்வே சமரசக் குழுவினர் முயற்சி மேற்கொண்டனர்.
கடந்த நவம்பர் 1ம் தேதி நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம், புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர்இலங்கை அதிபர் சந்திரிகாவையும் சந்தித்துப் பேசினார்.
நார்வே தூதுக்குழுவினரின் சமரச முயற்சி ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், புலிகள் மாவீரர்கள் வாரம் கொண்டாடினார்கள். மாவீரர்கள்தினத்தின் இறுதிநாளன்று பிரபாகரன் ஆற்றிய உரையில், இலங்கை அரசுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்குத் தயார். இருப்பினும் சமரசப் பேச்சு நடந்துகொண்டிருக்கும் போது சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இலங்கை அரசும் நிபந்தனையற்றபேச்சுவார்த்தைக்குத் தயார் என்று அறிவித்திருந்தது.
இதற்கிடையே விடுதலைப்புலிகள் சண்டை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து புலிகளின் லண்டன் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
சமரசப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடப்பதற்காக ஒரு மாதம் சண்டை நிறுத்தத்தை அறிவித்துள்ளோம். புலிகள் மீது இலங்கை ராணுவ வீரர்கள் தாக்குதல்நடத்தாமல் இருந்தால் சண்டை நிறுத்தம் மேலும் நீட்டிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை ராணுவ வீரர்கள் மீது எந்தத் தாக்குதலையும் நடத்த வேண்டாம் என்று விடுதலைப்புலிகளின் எல்லா பிரிவுகளுக்கும் பிரபாகரன்உத்தரவிட்டுள்ளார்.
சண்டை நிறுத்தம் டிசம்பர் 24 ம் தேதி முதல் ஜனவரி 22 ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications