For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அநாகரீக போக்கு .. போலீஸார் மீது புகார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த ஆயுதப்படை காவலரிடமும், அவரது மனைவி மற்றும் குழந்தைகளிடம் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டதற்காகபரங்கி மலை போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உட்பட ஏழு பேர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மனித உரிமை கமிஷனில் புகார்செய்யப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக ஆயுதப்படை காவலர் காந்தி என்பவரின் மனைவி ஜெயராணி, மனித உரிமை கமிஷனின் விசாரணை பிரிவு தலைவர் கார்த்திகேயனுக்குஅனுப்பியுள்ள புகார் விவரம் வருமாறு:

கடந்த சில தினங்களுக்கு முன் பரங்கிமலை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காமராஜ், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், ஏட்டுக்கள் சிவா, முருகேசன்,காவலர் கோபால் மற்றும் இருவர் ஆலந்தூர் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் உள்ள எனது வீட்டிற்கு ஜீப்பில் வந்து இறங்கினர். பின் எனது வீட்டைஅவர்கள் சூழ்ந்தனர்.

அவர்களில் இன்ஸ்பெக்டர் காமராஜ், என்னைப் பார்த்து யார் நீ? உள்ளே காந்தி இருக்கானா? என அதட்டினார். அதைக் கேட்டு நான் மிகவும் பயந்துபோய் என் வீட்டினுள்ளே இருந்த என் கணவரை கூப்பிட்டேன். என் கணவர் வெளியே வந்து ஜீப்பில் வந்திருந்த காமராஜை பார்த்து வணக்கம் கூறி விட்டுஎன்ன சார் என்று கேட்டதற்கு ஆய்வாளர், எஸ்.பி உத்தரவு மெமோ கொடுக்க வந்துள்ளோம். இதை நீ வாங்க முடியுமா, முடியாதா? எனமிரட்டினார்.

காமராஜரிடம் என் கணவர் கூறுகையில், ஏற்கனவே 13.12.2000 அன்று சப் இன்ஸ்பெக்டர் கலிமுல்லா கான் மற்றும் ஏட்டு சுரேஷ், டிஜிபி உத்தரவுஎன்று கூறி இதே மெமோவை கொடுக்க என் வீட்டிற்கு வந்தார்கள். அவர்களிடம், இந்த மெமோ சம்பந்தமான வழக்கு தமிழ்நாடு நிர்வாகத்தீர்ப்பாய நீதி மன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ளது. மெமோவில் கண்ட குற்றம் சம்பந்தமாக ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்திற்குமாற்றுதல் செய்துள்ளார்கள். ஆகவே ஒரே காரணத்திற்கு இரண்டு தண்டனை வழங்கியுள்ளது என்பது நியாயமற்றது என எடுத்துரைத்தார்.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டரும், ஏட்டும் சென்று விட்டார்கள் என்று இன்ஸ்பெக்டர் காமராஜிடம் என் கணவர் கூறினார். இதைக் கேட்டதும்காமராஜ் மிகுந்த கோபத்துடன் இந்த பூச்சாண்டி வேலை எல்லாம் என்னிடம் காட்டாதே. நான் நினைத்தால் நீ என் லிமிட்டில்தான் இருக்கிறாய். உன் மீதுபொய் கேஸ் போட்டு உன்னையும் உன் குடும்பத்தையும் அழித்து விடமுடியும். மரியாதையா உத்தரவை வாங்கு என்றார்.

பின்னர், பக்கத்தில் இருந்த ஒரு ஏட்டை இங்கே வாங்க என்று கூறிக் கொண்டே என் கணவரைத் தள்ளி விட்டு, என்னையும் என் மூன்று குழந்தைகளையும்உள்ளே வைத்து வெளியில் இருந்து வீட்டின் கதவை பூட்டி தன்னுடன் வந்த சப்-இன்ஸ்பெக்டரை பார்த்து இந்த மெமோவை ஒட்டு என்று கூறி கதவில்மெமோவை ஒட்டி போட்டோவும் எடுத்துக் கொண்டார்.

என் கணவருக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. எனது மூன்று குழந்தைகளுடன் பட்டினியில் வாடுகிறேன். குழந்தைகளுக்கு பள்ளி பீஸ்கூட கட்ட முடியவில்லை. இது சம்பந்தமாக காஞ்சிபுரம் கலெக்டர், உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி, முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு இரண்டுதடவை தந்தி மூலமாக தெரிவித்தும் இது நாள் வரை நீதி வழங்கவில்லை. அதற்கான முயற்சி கூட எடுக்கப்படவில்லை.

என் கணவரை காவலர் என்றும் பாராமல், தீவிரவாதிகளைப் பிடிக்க வருவது போல் ஒரு போலீஸ் படையுடன் ஜீப்பில் வந்து சுமார் 300 காவலர்குடும்பங்கள் வசிக்கும் இடத்தில் எங்களை அசிங்கப்படுத்தி அவமானப்படுத்துகிறீர்களே? இது நியாயமா? இந்த மனித உரிமையை மீறிய செயலுக்குஉங்களுக்கு யார் அதிகாரம் வழங்கியது எனக் கேட்டேன்.

இதையெல்லாம் என்னிடம் கூறாதே. என்னுடைய எஸ்.பி உத்தரவு கொடுத்ததை நாங்கள் செய்துள்ளோம். உன் குறையை விசாரிக்க நான் இங்கு வரவில்லை,என்று நான் கூறிய எதையுமே காதில் வாங்காமல் காவலர் குடியிருப்பே ஒட்டு மொத்தமாக வேடிக்கை பார்க்கும் அளவிற்கு காமராஜ் அநாகரிகமாகநடந்து கொண்டார்.

இதனால் மனமுடைந்து போன நான் வீட்டிற்குள் சென்று தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தேன். கணவரும் குழந்தகைளும் தடுத்ததால்தற்கொலை செய்து கொள்வதைத் தவிர்தேன். மேற் கூறிய அனைத்துக் காரணங்களுக்காவும், மனித உரிமை மீறல் செயலுக்காவும் எஸ்.பி பெயரைசொல்லிக் கொண்டு வந்த இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் அவருடன் வந்த அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X