காது கேளாதவராக நடித்து வேலை பெற்றவர்
ஊட்டி:
காது கேட்காதவர் போல் நடித்து வாலிபர் ஒருவர் அரசு வேலை வாங்கியதை லஞ்ச ஒழிப்புபோலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
ஊட்டி நகராட்சியில் 1998-ம் ஆண்டு ஓவர்சியர் பதவி காலியாக இருந்தது. இந்தவேலைக்கு உடல் ஊனமுற்றவர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்குமுன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அரசு கூறியிருந்ததது.
அதனடிப்படையில் நடந்த நேர்முகத் தேர்வில் ஆல்துரை என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவர் காது கேளாதவர் என்று கொடுத்த சான்றிதழின் பேரில் அவருக்கு உடல்ஊனமுற்றவர் என்ற முறையில் அவருக்கு வேலை கொடுக்கப்பட்டது.
ஆனால் அவருக்கு நன்கு காது கேட்கும் என்பது பின்னர் தெரியவந்தது. இதை அங்குவேலை செய்பவர்கள் பெரிதாக கருதவில்லை. ஆனால் ஊட்டியில் இருக்கும் சுரேஷ்என்பவர் இது தொடர்பாக டிரிப்யூனல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறைக்கு ஆல்துரைபணி நியமனம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ஆல்துரையை கோவையிலிருக்கும் பிரபலமருத்துவமனையில் சோதனை செய்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர் அவருக்குநன்றாக காது கேட்கும் என கூறினார்.
இதைத் தொடர்ந்து ஆல்துரைக்கு காது கேட்காது என சான்றிதழ் கொடுத்த மருத்துவரைவிசாரணை செய்தனர். அந்த மருத்துவர் தான் பரிசோதித்த போது ஆல்துரையின் காதுகேட்கும் ஒலி அளவு குறைவாக இருந்தது என கூறினார்.
இந்த பணி நியமனத்தில் பல முறைகேடுகள் நடந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. நகராட்சிகமிஷனர் மருத்துவர் கொடுத்த சான்றிதழின் படிதான் ஆல்துரைக்கு வேலைகொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications