ஜாதிக் கட்சிகள் வானவில் மாதிரி .. வீரமணி
கரூர்:
சாதிக் கட்சிகள் என்பது மழை காலத்து வானவில் அல்லது காளான் போன்றது. அதுவரும், கூட்டம் போடும், ஆனால் நிலைக்காது என்று திராவிடர் கழக பொதுச்செயலாளர் கி.வீரமணி கூறியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ்ஸின் மதவெறி அபாயம், உள் ஒதுக்கீட்டில் மகளிருக்கு 33 சதவித இடஒதுக்கீடு, மண்டல் பரிந்துரைகளை அமல் செய்வது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கையைவலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் கரூர் முதல் சென்னை வரை நடக்கும்விழிப்புணர்வு வெளிச்சக் கூட்டத்தின் தொடக்க விழா கரூரில் நடந்தது.
இதை துவக்கி வைக்க திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கரூர் வந்தார்.அவர் நிருபர்களிடம் கூறுகையில், எல்லா சாதியினரையும் அர்ச்சகர் ஆக்க வேண்டும்என்பது அர்ச்சகர் பிரச்னை மட்டுமல்ல சாதி ஒழிப்பு பிரச்னையுமாகும்.
தந்தை பெரியாரின் கடைசி கால போர் இதற்காக நடந்தது. முதல்வர் கருணாநிதி கூடபெரியாரின் நெஞ்சில் இந்த பிரச்னையை முள்ளாக வைத்து அதை நீக்காமல் அவரைபுதைக்கிறோம் என கூறினார்.
இந்த பிரச்சனையை வலியுறுத்தி வரும் 29-ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம்நடத்துகிறோம்.
இந்த போராட்டம் இந்து அறநிலைய பாதுகாப்பு துறை அலுவலகங்கள் முன்பும், அரசுஅலுவலகங்கள் முன்பும் நடைபெறும். அரசு இந்த பிரச்சனையில் அதிக அழுத்தம்காட்ட வேண்டும் என்பதுதான் இந்த போராட்டத்தின் நோக்கம்.
வங்கி ஊழியர் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். தனியாரை அனுமதிப்பதைநாங்கள் எதிர்க்கிறோம்,
சட்டமன்ற தேர்தலில் மதசார்பற்ற அணிக்கு ஆதரவளிப்போம். சாதிக்கட்சிகளைஒதுக்கி வைக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்களுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளோம்.
சாதிக் கட்சிகள் என்பது மழை காலத்து வானவில் அல்லது காளான் போன்றது. அதுவரும், கூட்டம் போடும், ஆனால் நிலைக்காது.
பெரியார் பற்றி திரைப்படம் எடுத்ததற்காக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.வரவாற்றை திரிக்காமல் வரலாறாகவே காட்ட வேண்டும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications