மேல் மருவத்தூருக்கு சிறப்பு ரயில்கள்
சென்னை:
இருமுடி திருவிழாவையொட்டி, தமிழகத்தில் 24 இடங்களிலிருந்து மேல்மருவத்தூருக்கு சிறப்பு ரயில்கள் விட தென்னக ரயில்வே தீர்மானித்துள்ளது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் இருமுடி திருவிழா நடக்கிறது. இதையடுத்து மேல்மருவத்தூருக்கு சிறப்பு ரயில்கள் விட தென்னக ரயில்வே முடிவுஎடுத்துள்ளது.
சிறப்பு ரயில்கள் குறித்த விவரம் வருமாறு:
நெல்லையிலிருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 5.30 மணிக்கு மேல்மருவத்தூர் போய் சேரும். அதுபோல் அங்கிருந்து மாலை 5மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 1.30 மணிக்கு நெல்லை வந்து சேரும்.
இந்த சிறப்பு ரயில் நெல்லையிலிருந்து ஜனவரி 17, 19, 20, 22, 23, 25, 29 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.
மதுரையிலிருந்து காலை 10.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் 3 மணிக்கு மேல்மருவத்தூர் போய்ச் சேரும். இந்த ரயில் மதுரையில் இருந்து டிசம்பர் 28,30ஜனவரி 2,29 தேதிகளில் இயக்கப்படுகிறது.
புதுக்கோட்டையிலிருந்து பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும் ரயில் மேல்மருவத்தூருக்கு அடுத்த நாள் காலை 3 மணிக்குப் போய்ச் சேரும். அதுபோல்அங்கிருந்து 5.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 4.25 மணிக்கு புதுக்கோட்டை வந்து சேரும்.
இந்த ரயில் புதுக்கோட்டையில் இருந்து ஜனவரி 20, 24, 27 தேதிகளில் இயக்கப்படுகிறது. கடலூர் - மேல்மருவத்தூருக்கு இடையே சிறப்பு ரயில்விடப்படுகிறது. இந்த ரயில் கடலூரிலிருந்து ஜனவரி 7 ம் தேதி காலை 7 மணிக்குப் புறப்பட்டு அன்று காலை 10.30 மணிக்கு மேல்மருவத்தூர் போய்ச்சேரும்.
இதேபோல் பழனி, அறந்தாங்கி, சிவகாசி, தேவகோட்டை ரோடு, காரைக்குடி, தேனி, போடி நாயக்கனூர், விருதுநகர், ராஜபாளையம், சிதம்பரம்,கும்பகோணம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய இடங்களிலிருந்தும் மேல் மருவத்தூருக்கு சிறப்பு ரயில்கள் விடப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications