புலிகள் மீது தாக்குதல் தொடரும் .. இலங்கை அறிவிப்பு
கொழும்பு:
அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும் வரை விடுதலைப் புலிகள் மீது ராணுவம்நடத்திவரும் தாக்குதல் தொடரும் என இலங்கை பிரதமர் அறிவித்துள்ளார்.
இலங்கை அரசுடன் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த விடுதலைப் புலிகள் முன்வந்துள்ளனர். தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 1 மாதம் சண்டைநிறுத்தம் அறிவித்துள்ளனர்.
நல்லெண்ண அடிப்படையில் இலங்கை அரசும் சண்டை நிறுத்தம் அறிவிக்க வேண்டும்என விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால்இலங்கை அரசு அதை மறுத்துவிட்டது.
இலங்கை அதிபர் சந்திரிகா வெளிநாடு சென்றிருப்பதால் அவர் சார்பில் பிரதமர்ரத்னசிரி விக்ரமநாயகேயும், வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமரும்கூட்டாக அறிக்கை வெளியிடுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
விடுதலைப் புலிகள் நேர்மையான முறையில் பேச்சு வார்த்தைக்கு முன் வர வேண்டும்.அதுவரை சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட மாட்டாது. பேச்சு வார்ததை நல்லமுறையில் நடைபெற்றால் அதன் பிறகு சண்டை நிறுத்தம் பற்றி யோசிக்கலாம்.
விடுதலைப் புலிகளுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்த முன்வந்திருப்பதே நல்லெண்ணஅடிப்படைதான். இதை விட வேறெந்த நல்லெண்ண அறிவிப்பும் இப்போதுதேவையில்லை என நாங்கள் கருதுகிறோம் என கூறியுள்ளனர்.
விடுதலைப்புலிகள் சண்டை நிறுத்தம் அறிவித்த பின் சென்ற இரு நாட்களில் நடந்ததாக்குதலில் 142 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவ தரப்பில்கூறப்பட்டுள்ளது.
இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் சனத் கருணரத்னே நிருபர்களிடம்கூறுகையில், வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடந்த தாக்குதலில் 60 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர். 25 ராணுவத்தினரும் கொல்லப்பட்டனர்.
இரு நாட்களில் மட்டும் 142 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். இது வரை 30உடல்களை நாங்கள் கைப்பற்றியுள்ளோம். விடுதலைப் புலிகளின் வானொலி 124விடுதலைப்புலிகள் பலியானதாக ஒப்புக் கொண்டுள்ளது.
சனிக்கிழமை நாவற்குழியில் நடந்த கமாண்டோ தாக்குதலில் 12-க்கும் அதிகமான சிறுவயது விடுதலைப் புலிகள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 14 பேர்பெண்கள் என கூறினார்.












Click it and Unblock the Notifications