வாழப்பாடியை நீக்குங்கள் .. மீண்டும் கூருகிறது பா.ம.க.
சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து, வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையிலான தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சியை நீக்க வேண்டும் என்று பாட்டாளிமக்கள் கட்சி தலைவர் ஜி.கே. மணி வலியுறுத்தியுள்ளார்.
திங்கள்கிழமை சென்னையில் அவர் நிருபர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலில் பாட்டாளி மக்கள்கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்கும். அதிலிருந்து விலகும் எண்ணம் எதுவும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இல்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையிலான தமிழக ராஜீவ் காங்கிரசும் அங்கம் வகிக்கிறது. இருப்பினும் தேசியஜனநாயகக் கூட்டணியின் சார்பில் நடத்தப்படும் கூட்டங்களில் வாழப்பாடி ராமமூர்த்திக்கு அழைப்பு எதுவும் கொடுக்கப்படவில்லை.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சமீபத்தில், பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்துப் பேசினார். அப்போது பிரதமர், ராமதாசிடம்கூறுகையில், வாழப்பாடி ராமமூர்த்தி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உறுப்பினராக இல்லை என்று கூறியுள்ளார்.
பாண்டிச்சேரியில் பொதுமக்களுக்கு நன்மை எதுவும் செய்யாத முதல்வர் சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
வாழப்பாடி ராமமூர்த்தியும், ராமதாசும் தங்களது பிரச்சனைகளை தாங்களேபேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சித்தலைவர் கிருபாநிதி கூறியுள்ளார். இது அவரது தனிப்பட்ட கருத்து. இதுகுறித்து நான் கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது என்றார் மணி.
யு.என். ஐ.












Click it and Unblock the Notifications