மூப்பனாருக்கு கறுப்புக் கொடி .. இந்து முன்னணி
சேலம்:
தமிழ்நாட்டில் மூப்பனார் எங்கு சென்றாலும் அங்கு சென்று கறுப்புக் கொடி காட்டுவோம் என இந்து முன்னணிஅமைப்பாளர் வீரபாகு தெரிவித்தார்.
சேலத்தில் வீரபாகு நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
பாளையங்கோட்டையில் மசூதியில் நோன்பு செய்து கொண்டிருந்த ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில்போலீஸ் விசாரணை துவங்குவதற்கு முன்பே பலர் கற்பனையில் ஏதோ நினைத்து அறிக்கை விடுத்தனர்.
அரசு கூட உண்மை வெளிப்படுவதற்கு முன்பே ரூ. 2 லட்சம் நிவாரண நிதியும், தந்தையைக் கொலை செய்தமகனுக்கே அரசு வேலையும் அறிவித்து விட்டது.
இந்த சம்பவத்திற்கு கண்டன அறிக்கை வெளியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் மூப்பனார்,அயோத்திய பிரச்னையில் வாஜ்பாய் தெரிவித்த கருத்துக்கு எதிராக பாளையங்கோட்டை மசூதி மீது குண்டு வீச்சுநடந்திருக்கலாம் எனவும், நெல்லை பஸ் நிலையத்துக்கு காயிதே மில்லத் பெயர் வைக்கப்படாததால் இதனைசெய்திருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
இந்து இயக்கங்கள் மீது பழி சுமத்திய மூப்பனார், இதற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்க வேண்டும்.அவ்வாறு அவர் செய்யவில்லை என்றால், ஜனவரி 15 முதல் பிப்ரவரி 15 வரை ஒரு மாத காலத்திற்கு தமிழ்நாட்டில்மூப்பனார் எங்கு சென்றாலும், அங்கு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
கொலைக்கான காரணம் தெரியுமுன்பே ரூ. 2 லட்சம் நிதியை முதல்வர் அறிவித்துள்ளார். இந்த முடிவை எதிர்த்தும்ஆர்ப்பாட்டம் செய்யப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications