விரைவில் வருகிறது விளையாட்டுக் கொள்கை .. அமைச்சர்
மதுரை:
புதிய விளையாட்டுக் கொள்கையை வகுப்பதில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது என்று மத்தியவிளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மதுரையில், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விளையாட்டுக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்றதேவையை மத்திய அரசு உணர்ந்துள்ளது. இதுதொடர்பாக நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த விளையாட்டுஅமைப்புகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தன.
சர்வதேச தரத்திற்கு ஏற்ற வகையில், இந்திய வீரர், வீராங்கனைகளின் தரத்தை உயர்த்துவதற்குத் தேவையானநடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
மேட்ச் பிக்ஸிங் போன்ற ஊழல் புகார் கூறப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்துசட்டத்துறையின் ஆலோசனையை எங்கள் துறை கேட்டுள்ளது.
தவறு செய்த கிரிக்கெட் வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications