சபரிமலை நெரிசலில் சிக்கி 2 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

பந்தனம்திட்டா:

சபரிமலை சன்னிதானத்திற்கு செல்லும் வழியில் போடப்பட்டிருந்த இரும்பு தடுப்பில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2பேர் இறந்தனர். 40 பேர் காயமடைந்தனர்.

சபரிமலையில் கடந்த சில தினங்களாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. மண்டல பூஜை டிசம்பர் 26-ம் தேதிநிறைவு பெறுவதால் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உள்பட 2 பேர்இறந்தனர். 40 பேர் காயமடைந்தனர்.

சரங்குத்தி என்ற பகுதியிலிருந்து மகரக்கோட்டம் வழியாக ஏராளமான பக்தர்கள் ஐயப்பன் சன்னிதானத்திற்கு வந்துகொண்டிருந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக இரும்பு கம்பியில் தடுப்புகள் போட்டிருந்தது. கூட்டம்அதிகமாக இருந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி ஆந்திராவைச் சேர்ந்த சாம்ப்ராஜ் அம்மா என்பவர் உள்பட 2 பேர்இறந்தனர்.

காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் டிராலி மூலம்பம்பாவிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பந்தனம்திட்டா அரசு மருத்துமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டனர்.

26-ம் தேதி மண்டல பூஜைக்குப்பின் ஐயப்பன் சன்னிதி நடை மூடப்படும். பின் மீண்டும் மகர ஜோதி தரிசனத்திற்காகஅடுத்த மாதம் 1-ம் தேதி தான் சன்னிதியின் நடை திறக்கப்படும். மகர ஜோதி தரிசனம் ஜனவரி மாதம் 14-ம் தேதிநடைபெறும். அதன் பின் நடை ஜனவரி மாதம் 20-ம் தேதி மீண்டும் மூடப்படும்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+