சீன கிறிஸ்துமஸ் விழாவில் தீ: 309 பேர் பலி
பீஜிங்:
சீனாவில் லூயாங்க் நகரிலுள்ள நடன அரங்கில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடிக் கொண்டிருந்த போது திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் 309 பேர்கொல்லப்பட்டனர்.
தீ விபத்தில் காயமடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் உள்ள லூயாங்கில் நடன அரங்கத்தின் 4 வது மாடியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த போது திடீரென்று தீ விபத்துஏற்பட்டது. இதையடுத்து 6 பேர் அங்குள்ள ஜன்னல் வழியே வெளியே குதித்துத் தப்பித்து விட்டனர்.
மேலும் 2 வது மற்றும் 3 வது மாடிகளில் வேலை செய்து கொண்டிருந்த கட்டிடத் தொழிலாளிகளும் அங்கிருந்து தப்பித்து ஓடினர். இந்தத் திடீர் தீ விபத்துக்குக்காரணம் என்ன என்று தெரியவில்லை. முதலில் மாடியின் கீழ் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு அங்குமிங்கும் பரவியதாகக் கூறப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் 7 மாடிக் கட்டிடமாகும். இங்கு வியாபார ஸ்தலங்கள், சிறு சிறு கடைகள், ஜவுளிக் கடைகள் மற்றும் இதர கடைகள்இயங்கி வருகின்றன.
1994 ம் ஆண்டும் இதே போல் சின்சியாங்கில் உள்ள கராமேயில் உள்ள அரங்கில் தீ விபத்து ஏற்பட்டதில் 323 பேர் கொல்லப்பட்டனர்.இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications