தாமரைக்கனியை கைது செய்ய தேவையில்லை
சென்னை:
தாமரைக்கனி எம்.எல்.ஏவை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று சபாநாயகர் பி.டி.ஆர்பழனிவேல்ராஜன் புதன்கிழமை அறிவித்தார்.
அவர் சென்னையில் புதன்கிழமை நிருபர்களிடம் கூறுகையில், தாமரைக்கனி எம்.எல்.ஏவுக்கு பதினைந்து நாள்தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு பற்றி எனக்கு திருப்தி இல்லை. பதினைந்து நாள் என்பதுஅதிகம். அவர் ஏற்கனவே இரண்டு நாள் சிறையில் இருந்து இருக்கிறார்.
இப்பொழுது பிரச்சனை தண்டனையைப் பற்றியது அல்ல. சட்டசபையின் இறையாண்மை காக்கப்பட வேண்டும்என்பது தான் என்று குறிப்பிட்டவர், தாமரைக்கனியே என்னிடம் தொலைபேசியில் பேசினார். சரண் அடைந்துவிடவா? என்றும் கேட்டார். தேவையில்லை என்று நான் கூறினேன். மேலும் தனக்கு உடல்நலக்குறைவுஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சேரப் போவதாகவும் என்னிடம் கூறினார்.
உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டிய அவசியம்இல்லை. என்னுடைய அதிகாரத்தில் நீதிமன்றம் குறுக்கீட முடியாது. தாமரைக்கனி உச்ச நீதிமன்றத்தில் முறையீடுசெய்யலாமா? என்பது அவருடைய விருப்பம்.
தாமரைக்கனி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சட்டசபைதான் முடிவு செய்ய வேண்டும்.சட்டசபையில் உள்ள எதிர்கட்சி தலைவர்களை கலந்து பேசிய பிறகு மேலு ம் தண்டனையை நீடிக்கலாமா? அல்லதுவேண்டாமா? ஏற்கனவே அவர் அனுபவித்த இரண்டு நாள் தண்டனை போதுமா? என்பது பற்றி எல்லாம்எதிர்கட்சித் தலைவர்களிடம் கலந்து பேசி முடிவு எடுத்து அதன் பிறகு சபை முன்னவர் மூலம் தீர்மானமாக முன்மொழியப்படும் என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications