கடனைக் கட்டினார் க்ரோர்பதி
டெல்லி:
பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் பிரசார் பாரதிக்கு அவர் கொடுக்க வேண்டிய கடனில் ரூ 20.31 கோடியைதிரும்ப கட்டினார். மீதி பணத்தை வட்டியுடன் கட்டுவதாகவும் உறுதி அளித்திருக்கிறார்.
அமிதாப்பச்சன் பிரசார் பாரதிக்கு கட்ட வேண்டிய கடனில் ரூ 9,64,53,558 ரூபாய்கான காசோலையை பிராசார்பாரதியின் உயர் அதிகாரி பங்கு பெற்ற நிகழ்சசி ஒன்றில் அளித்தார்.
அந்த நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குனரும், நாடாளுமன்ற உறுப்பினருமானஅமர்சிங்கும் பங்கேற்றார். இதற்கு முன் அமிதாப்பச்சன் ரூ 50 லட்சம் கட்டியிருந்தார்.
அமிதாப்பச்சன் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் 1995-ம் ஆண்டு அமிதாப்பச்சனால் துவங்கப்பட்டது. நஷ்டம்காரணமாக அந்த நிறுவனம் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது மீண்டும் நிறுவனம் துவஙக்கப்பட இருப்பதாகஅமிதாப்பச்சன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், பி.ஐ.எஃப்.ஆர் நிறுவனம் இன்னமும் ஏ.பி.சி.எல்லை நஷ்டமடைந்தநிறுவனமாகவே அறிவித்துள்ளது. நான் கடனை திரும்ப கட்ட துவங்கிய பிறகு அந்த பட்டியிலிலிருந்துஏ.பி.சி.எல். பெயரை அவர்கள் நீக்க வேண்டும்.
மீண்டும் அரசியலில் பங்கேற்கும் எண்ணம் எதுவும் எனக்கு கிடையாது. ஏ.பி.சி.எல் குடும்பத்தின் உறுப்பினரானஅமர்சிங் என்னை உத்திரபிரதேச தேர்தலில் பிரசராம் செய்யுமாறு கேட்டுக் கொண்டால் என்னால் அதை மறுக்கமுடியாது. ஆனால் அவர் அவ்வாறு நிச்சயம் கேட்க மாட்டார் என்றார் அமிதாப்.
யு.என்.ஐ.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications