சந்தேகத்தால் மகனைக் கொன்ற தந்தை

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவையில் தனக்குப் பிறந்த குழந்தைதானா என சந்தேகமடைந்த தந்தை தனது எட்டு வயது சிறுவனை நைலான்கயிற்றால் இறுக்கி கொலை செய்து விட்டு போலீசில் சரணடைந்தார்.

கோவை அருகே உள்ள சரவணம்பட்டி விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியம் (45). இவர் கூலி வேலைசெய்து பிழைப்பு நடத்தி வந்தார். இவரது மனைவி மல்லிகா (30). இவருக்கு ரஞ்சித் (11), செல்வராஜ் (8) என்றஇரு மகன்கள் இருந்தனர்.

இந்நிலையில் சுப்ரமணியம் தனது மனைவியின் நடத்தியில் சந்தேகமடைந்தார். இந்த சந்தேகம் நாளுக்கு நாள்அதிகரித்துக் கொண்டே போனது.

இதையடுத்து கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதுதவிர, தனது 2 வது மகன் செல்வராஜ்தனக்குப் பிறந்த பையன் தானா என்ற சந்தேகம் அவரை ஆக்கிரமிக்கத் தொடங்கியது.

இருந்தாலும் செல்வராஜ் தனது தந்தையுடன் தான் இரவில் படுத்து தூங்கி வந்துள்ளான். சந்தேகத்தால் மிகவும் மனஉளைச்சல் அடைந்த சுப்ரமணியம், வெளியில் சொல்ல முடியாமல் தவித்தார். இதையடுத்து, மகனைக் கொலைசெய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

வியாழக்கிழமை தனது மனைவி மல்லிகாவும், மூத்த மகன் ரஞ்சித்தும் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்த சமயத்தில்தனது அருகில் படுத்திருந்த மகன் செல்வராஜை கொல்ல திட்டமிட்டார்.

திட்டப்படி நைலான் கயிறு ஒன்றை தயார் செய்தார். நள்ளிரவில் மனைவியும் மற்றொரு மகனும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த போது, செல்வராஜ் கழுத்தில் கயிற்றை இறுக்கிக் கொலை செய்தார்.

பின்னர் தற்கொலைக்கு முயன்றார். ஆனால் திடீரென மனமாற்றம் அடைந்தார். தற்கொலை முயற்சியைக்கைவிட்டு, சரவணம்பட்டிக்குச் சென்று போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்துவிசாரணை செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+