For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆங்கிலக் கல்வி அவசியம் .. சபாநாயகர் பி.டி.ஆர்.

By Staff
Google Oneindia Tamil News

கேள்வி - பதில்

கே: தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்திற்கு ஆதரவாக நெடுமாறனை பேசஅனுமதிக்கும் தமிழக அரசு; அதைப் பார்த்துக் கொண்டு மவுனமாக இருக்கும் மத்திய அரசு - இரண்டில்தவறுக்கு பொறுப்பேற்க வேண்டியது எந்த அரசு?

ப: மாநில அரசு இம்மாதிரி விஷயங்களில் அக்கறை காட்டாது என்பது மத்திய அரசுக்கு நன்றாகவே தெரியும். ஆகையால் மத்திய அரசின்பொறுப்புதான் மிக அதிகம்.

கே: புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை சட்டம் தடுக்கும் எனக் கூறும் முதல்வர் கலைஞர், நெடுமாறனின் எந்த பேச்சையும் கண்டிக்காமலும்,மறுக்காமலும் மவுனம் சாதிப்பது எதனால்?

ப: முதல்வர் கூறியது இந்நாட்டு குடிமக்கள் பற்றி: நெடுமாறன் இந்திய தேசத்தின் குடிமகன் அலல: அவர் தமிழ் தேசத்தின் குடிமகன்: அவர் மீது நடவடிக்கைஎன்பது தமிழ் தேச அரசு உருவானால் தான் முடியும்.

கே: பாபர் மசூதி இடிப்பில் ஈடுபட்ட அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி - ஆகிய மூவரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் - என்றுலத்தீஃப் சொல்கிறாரே?

ப: நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு ( ஊணூச்ட்டிணஞ் ணிஞூ இடச்ணூஞ்ஞுண்) செய்தால், அவர்கள் பதவி விலகுவதுதான் முறையாகஇருக்கும். அப்படி நடக்காத வரை, அவர்கள் பதவியில் தொடர்வதில் தவறில்லை.

கே: கடமையை செய்தவரை பாராட்டுவது சரியா?

ப: ஒருவன் தன் வேலையைச் செய்கிறான் - என்பதே அபூர்வமான செய்தியாகிவிட்ட காலத்தில், கடமையைச்செய்பவனுக்கு பாராட்டு கிட்டுவதில் வியப்பில்லை.

கே: வீரப்பன் பிரச்னை தி.மு.க., அரசுக்கு பலமா, பலவீனமா?

ப: தேர்தல் வருவதற்குள் மக்களுக்கு இந்த விஷயமே மறந்து போய்விடும் சாத்தியக்கூறு பலித்தால் இது பலமும்இல்லை, பலவீனமும் இல்லை என்று ஆகிவிடும்.

கே: தேர்தல் ஆணையம் ஒரு பெண்ணுக்கு முட்டாள் என்ற வார்த்தையைக் கொண்ட, அடையாளஅட்டையைக் கொடுத்திருப்பது பற்றி ... ?

ப: பின் என்ன? எல்லா வாக்களர்களுக்குமா அதே மாதிரி கொடுக்க முடியும்.? அது உண்மையைப்பிரதிபலிப்பதாக இருக்கலாம். ஆனால் குழப்பம் வருமே!

கே: அழகிப் போட்டிகளைத் தாங்கள் ஆதரிக்கிறீர்களா? அல்லது எதிர்க்கிறீர்களா?

ப: இவை நடப்பது பற்றி வியப்படைகிறேன்.

கே: கி.வீரமணி ஒரு ராஜகுரு, நான் அவரை அப்படித்தான் அழைப்பேன் - என்று மூப்பனார்கூறியுள்ளாரே?

ப: ரஸ்புடீன் ஞாபகம் வந்ததால், மூப்பனார் இப்படி பேசியிருக்கிறார் - என்று நினைக்கிறீர்களா? சே. சே. அப்படிஇருக்காது.

கே: வீரப்பனை பிடிக்கும் முயற்சியில், மத்திய அரசு தன்னிச்சையான நடவடிக்கை எடுக்க முடியாதா?

ப: முடியும்: எடுக்க மறுக்கிறது. வீரப்பன் விஷயம் என்பது இப்போது விடுதலைப் புலி தொடர்புடைய, இருதீவிரவாத குழுக்கள் விஷயம் என்பதைப் பார்க்க மத்திய அரசு முன்வரவில்லை. இது மிகப் பெரிய தவறாகமுடியக்கூடும்.

கே: தமிழகமெங்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளையொட்டி,போஸ்டர்கள் ஒட்டப்பட்டது குறித்து .. ?

ப: அரசு தூதராக நெடுமாறன் நியமிக்கப்பட்டதற்கும், அவரை தமிழக அரசு பாராட்டியுள்ளதற்கும் எந்த பயனுமேஇல்லாமற் போகுமா?

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X