மெரினாவில் 24 மணி நேர காவல் நிலையம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை மெரீனா பீச்சில் கடற்கரை ரோந்துப்பணி தொடங்கப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய 2 வது கடற்கரை மெரினா கடற்கரை. இந்தக் கடற்கரைக்கு விழா நாட்களில் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் அதிககூட்டம் இருக்கும்.

பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகளின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்கும் விதத்திலும், பெண்களைக் கேலி செய்பவர்களை கண்காணிக்கும்வகையிலும் கடற்கரை ரோந்து பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, காந்தி சிலை அருகில் 24 மணி நேரமும் ஒயர்லெஸ் கருவியுடன் இயங்கும் காவல் நிலையம் அமைக்கவும், எலியட்ஸ் கடற்கரையில் ஒரு காவல்உதவி மையமும் நிறுவப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற