அரியலூர் மாவட்டம் நாளை முதல் செயல்படும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெரம்பலூர் மாவட்டத்தைப் பிரித்து உருவாக்கப்பட்ட அரியலூர் மாவட்டம் திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கும்.
அரியலூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் தொடங்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்தக் கோரிக்கையைஏற்று பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து அரியலூர் என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இதற்கு மத்தியஅரசும் ஒப்புதல் அளித்திருந்தது.
தற்போது புதிய மாவட்டம் ஜனவரி 1-ம் தேதி முதல் செயல்படத் துவங்குகிறது. புத்தாண்டு முதல் செயல் படத்தொடங்கும் அரியலூர் மாவட்டத்தில்அரியலூர், செந்துறை, உடையார் பாளையம் ஆகிய 3 தாலுக்காக்கள் இடம்பெறுகின்றன.
பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம், வேப்பந்தட்டை ஆகிய தாலுகாக்கள் இருக்கும்.












Click it and Unblock the Notifications