2000 மாவது ஆண்டில் பாண்டிச்சேரி அரசியல் நிலை
பாண்டிச்சேரி:
மத்தியில் 4 ஆண்டுகளாக ஆட்சி செலுத்திவரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ளதி.மு.க.பாண்டிச்சேரியில் பதவி இழந்தது 2000 மாவது ஆண்டில் பாண்டிச்சேரியில் நடைபெற்ற முக்கியமானநிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.
பாண்டிச்சேரியின் புதிய முதல்வராக சண்முகம் மார்ச் மாதம் 22-ம் தேதி பதவி ஏற்றார். முதல்வராக வேண்டும்என்ற அவரது நீண்ட நாள் ஆசை அன்று நிறைவேறியது.
ஜானகிராமன் தலைமையிலான அரசுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவை விலக்கிக் கொண்டதால் அவரது அரசுபதவி இழந்தது.
பாண்டிச்சேரி இயற்கைச் சீற்றத்தாலும் மற்றும் பரவிய வன்முறையாலும் பாதிப்படைந்தது. இந்த சம்பவங்களில் 4பேர் உயிரிழந்தனர்.
பாண்டிச்சேரியில் தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள சண்முகம் த.மா.கா.வில் கண்ணனுக்கு தனதுஅமைச்சரவையில் மார்ச் மாதம் 25-ம் தேதி இடமளித்தார்.
மார்ச் மாதம் 25ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கில் சண்முகம் வெற்றி பெற்றார். 33 உறுப்பினர்கள் சபையில் 20பேர்ஆதரவை பெற்று அவர் வெற்றி பெற்றார்.
ஏப்ரல் மாதம் 6-ம் தேதி தனது அமைச்சரவையில் ஜெயக்குமார் உள்பட 3 மந்திரிகளை இணைத்துக் கொண்டார்.இதை கண்ணன் கடுமையாக எதிர்த்தார்.
ஜெயக்குமாரின் வீட்டில் வேலை பார்த்து வந்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவந்தவர் காணாமல் போனதில்ஜெயக்குமாருக்கும் பங்கு உண்டு என கண்ணன் குற்றம் சாட்டி வந்தார்.
இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
த.மா.கா,வைச் சேர்ந்த கந்தசாமியை தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார். இவர் முந்தையஅமைச்சரவையில் துணை சபாநாயகராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்ணனுக்கும், ஜெயக்குமாருக்கும் இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடு த.மா.கா, வில் பிரிவினையைஏற்படுத்தியது.
இதன் மூலம் பாண்டிச்சேரியில் பாண்டிச்சேரியில் மக்கள் காங்கிரஸ் என்ற புதிய கட்சி லட்சுமி நாராயணன்தலைமையில் உருவானது,
டிசம்பர் மாதம் பொதுப்பணித்துறை அமைச்சர் கண்ணன் ஜெயக்குமாருக்கும் விடுதலைப் புலிகளுக்கும்தொடர்பிருப்பதாக குற்றம் சுமத்தினர். ஆனால் ஜெயக்குமார் இதை மறுத்து வந்துள்ளார்.
டிசம்பர் மாதம் 10-ம் தேதி கண்ணனை அமைச்சரவையிலிருந்து நீக்கினார்.
டிசம்பர் 25-ம் தேதி சபாநாயகர் சுப்ரமணியம் த.மா.கா. உறுப்பினர் மனோகர் அணியினரை கட்சி தாவல்சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்தார்.
பதவி நீக்கத்திற்கு முன்னதாக கண்ணனின் ஆதரவாளர்கள் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டனர். ஆனாலும் 26 உறுப்பினர்கள் கொண்ட சபையில் சண்முகத்துக்கு 15 பேர் ஆதரவிருப்பதால் அவரதுஅரசுக்கு தற்போது ஆபத்து இல்லை. சண்முகம் அரசு ஏப்ரல் மாதம் வரவிருக்கும் தேர்தல் வரை எந்த விதபிரசனையும் இன்றி ஆட்சி நடத்தும் என கூறப்படுகிறது.
யு.என்.ஐ.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications