கள்ளச்சாராயம் கடத்திய 2 பேர் கைது
காஞ்சிபுரம்:
சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ரூ 1.5 லட்சம் பெறுமானமுள்ள 1,200 லிட்டர் கள்ளச் சாராயத்தைக் கடத்திக் கொண்டு சென்ற கும்பலைப்போலீஸார் காஞ்சிபுரம் அருகே மடக்கிப் பிடித்தனர்.
இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் போலீஸார் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சென்னையிலிருந்து வந்து கொண்டிருந்த டேங்கர் லாரி போலீஸார் நின்று கொண்டிருப்பதைக் கண்டுகொள்ளாமல் மிக வேகமாகச் சென்றது.இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்த லாரியை தனது ஜீப்பில் பின்தொடர்ந்தார்.
பின்னர் திருப்பம் ஒன்றின் அருகே லாரிக்கு முன்பாக தனது ஜீப்பைக் கொண்டு நிறுத்தினார் இன்ஸ்பெக்டர். பின்னர் லாரி டிரைவரையும், இன்னொருவரையும் கைதுசெய்தனர். அவர்கள் பெங்களூருக்குக் கடத்திக் கொண்டிருந்த ரூ 1.5 லட்சம் பெறுமானமுள்ள சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்துவிசாரணை நடந்து வருகிறது என்றனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications