தேர்தலை சந்திக்க தயாராகிறது புதிய நீதிக்கட்சி
சென்னை:
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்க ஏ.சி.சண்முகத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்படுவதாக புதியநீதிக் கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதிய நீதிக் கட்சியின் மாநில முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திராதிருமண மண்டபத்தில் நடந்தது.
இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு கட்சியின் தலைவர்ஏ.சி.சண்முகம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சத்தானந்தம் முன்னிலை வகித்தார். கட்சியின் பொதுச்செயலாளர் ஐசரி கணேஷ், விஜி, ராஜேந்திரன் ஆகியோர் வரவேற்றுப் பேசினார்கள்.
இந்த கூட்டத்தில் 1150 பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் 400 சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் விபரம் வருமாறு:
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்க மற்ற இயக்ககங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது உள்படஅனைத்து முடிவுகளையும் புதிய நீதிக்கட்சி சார்பில் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவிக்க இந்தபொதுக்குழு முழு அதிகாரம் அளிக்கிறது.
பத்து லட்சம் குடும்பத்தினரிடம் இருந்து சுமார் 1500 கோடி ரூபாய் தொகைகளை டெபாசிட்டாக பெற்றுக் கொண்டுஏழை எளியோர்களை சில நிதி நிறுவனங்கள் ஏமாற்றி விட்டது. முதலீட்டாளர்கள் டெபாஸிட் பாதுகாப்புச் சட்டம் 97-ஐ கொண்டு வந்து சிறப்பு தனிநீதிமன்றம் நிறுவிய போதிலும்நடைமுறைப்படுத்துவதில் அரசு மெத்தனம், பாராபட்சம் காட்டுகின்றது. இதனை பயன்படுத்தி சட்டத்தின் சந்துபொந்துகளில் நுழைந்து சிலர் தப்பிக்கின்றனர்.
பாரபட்டசமின்றி அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து முதலீட்டாளர்களுக்கு திரும்ப கிடைக்கநடவடிக்கை எடுக்க இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. மத்திய அரசின் தாராளமய பொருளாதாரக்கொள்கையை புதிய நீதிக்கட்சி பொதுக்குழு வரவேற்கிறது.
ஆனால் பல லட்சக்கணக்கான மக்கள் ஈடுபட்டுள்ள குடிசைத்தொழில் , குறுந்தொழில், சிறுதொழில் போன்றவைகள்பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பை இழந்து நடுத்தெருவிற்கு வருகின்ற நிலையைஏற்படுத்தும் பொருளாதாரக் கொள்கையை புதிய நீதிக்கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
புதிய பொருளாதாரக் கொள்கை லட்சக்கணக்கான மக்கள் ஈடுபட்டுள்ள சிறு தொழில், குடிசைத்தொழில் ,குறுந்தொழில், ஆகியவற்றை பாதுக்காக்கின்ற வகையில் இருக்க வேண்டுமென்று மத்திய அரசை இப்பொதுக்குழுகேட்டுக் கொள்கிறது. இவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications