திண்டுக்கல் அருகே மனித வெடிகுண்டு
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு நகரில் நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்க வந்த மனிதவெடிகுண்டு வாலிபர் வெடித்து சிதறினார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள நாட்டார்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர் சேகர் (28). இவர் வியாழக்கிழமை மாலை 5 மணிக்குவத்தலக்குண்டு ஹைஸ்கூல் ரோட்டில் உள்ள செந்தில் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்திற்கு வந்தார்.
அங்கிருந்த உரிமையாளர்களிடம் அவர் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் நான் இங்கே அடகு வைத்திருந்த நகைகளைத் திருப்ப வேண்டும் என்று கூறியிருக்கிறார்.உடனே அவர் டோக்கன் கொடுத்து உங்கள் நகைகளைப் பெற்றுச் செல்லுங்கள் என்று கூறினாராம்.
உடனடியாக சேகர், நான் மனித வெடிகுண்டாக வந்திருக்கிறேன். இங்கு இருக்கும் நகை, பணம் எல்லாவற்றையும் கொடுங்கள். இல்லாவிட்டால்வெடிகுண்டை வெடிக்கச் செய்வேன் என்று மிரட்டினார்.
இதனால் பயந்து போன கடை உரிமையாளர் மெய்யப்பச் செட்டியார், வெடிகுண்டு, வெடிகுண்டு என்று கூச்சல் போட்டுக் கத்தினார். இதையடுத்துஅக்கம்பக்கத்துக் கடையிலுள்ளவர்கள் அங்கே கூடினர். பயந்து போன சேகர் தன் இடுப்பில் கட்டியிருந்த ரிமோட் கருவியை அழுத்தினான். உடனடியாகவெடித்து சிதறி உடல் கருகி இறந்தார். அவர் பக்கத்தில் நின்று கொண்டிருந்த மெய்யப்பச் செட்டியாரும், இன்னொருவரும் காயம் அடைந்தனர்.
மனித வெடிகுண்டு வெடித்து இறந்த சேகரின் சட்டைப் பாக்கெட்டில் ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில் சேகர் எழுதியிருந்த விவரம்:
தாராபுரத்தில் ஒரு லாரி வாங்கினேன். அதற்காக வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியவில்லை. கடன் ரூ 75 ஆயிரத்தைத் தாண்டி விட்டது.பைனான்ஸ்காரர்களின் தொந்தரவு தாங்க முடியவில்லை. மனைவிக்கும், குழந்தைகளுக்கும் என்னால் எந்த உதவியும் செய்ய முடியவில்லை என்றுஎழுதியிருந்தார். போலீஸார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications