அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்குங்கள்: இலங்கை பிஷப்
கொழும்பு:
இலங்கை இனப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றால் உடனடியாகஇலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் மூன்றாவது நாடுகளின் உதவியுடன்பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று இலங்கை பிஷப் மேல்கோம் ரஞ்சித்தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தலைநகர் கொழும்பில் மேல்கோம் ரஞ்சித் நிருபர்களிடம் கூறியதாவது:
இலங்கையில் நடந்து வரும் இனப் பிரச்சனையால் தினந்தோறும் ஏராளமானஉயிர்ப்பலிகள் நடந்து வருகின்றன. இதை நிறுத்துவதற்கான அனைத்துநடவடிக்கைகளையும் இலங்கை அரசு எடுக்க வேண்டும். விடுதலைப்புலிகளும்இதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
புலிகள் அறிவித்த சண்டைநிறுத்த அறிவிப்பை நான் வரவேற்கிறேன். புலிகள் கூறுவதுபோல் சண்டைநடந்து கொண்டிருக்கும் போது பேச்சுவார்த்தை என்பதுசாத்தியமில்லாத ஒன்று. அதனால் புலிகளின் சண்டைநிறுத்தத்தை இலங்கை அரசு ஏற்கமுன் வர வேண்டும்.
நார்வே நாட்டின் சமரச முயற்சியைத் துணையாகக் கொண்டு, விடுதலைப்புலிகளும்,இலங்கை அரசும் விரைவில் பேச்சுவார்த்தையைத் தொடங்க முன்வர வேண்டும்.
இலங்கையில் உயர் அதிகாரிகள், சமூக சேவகர்கள் அடங்கிய அமைதி விரும்பும்குழுவினர், ஒன்றிணைந்து இலங்கை அரசிடமும், விடுதலைப் புலிகளிடமும்விரைவில் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்க வலியுறுத்த வேண்டும் என்றார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications