காங்கிரசில்தான் இருக்கிறேன்: மணிசங்கர அய்யர்
மயிலாடுதுறை:
காங்கிரஸை விட்டு நான் விலகவில்லை.விலகவும் மாட்டேன் என்று மயிலாடுதுறை எம்.பி.மணிசங்கர அய்யர்கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்ட அறிக்கை:
நான் காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்யவில்லை. காரிய கமிட்டிக்கு இதுநாள் வரை தேர்தலும்நடைபெறவுமில்லை. அகில இந்திய காங்கிரஸ் புதிய செயற்குழு உறுப்பினர்கள் யாரையும் அறிவிக்கவுமில்லை.
தமிழகத்தைச் சேர்ந்த அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.அக்கூட்டத்திற்கு எனக்கு அழைப்பு கிடைக்கப்பெறவில்லை.
அன்றைய தினம் நான் குடும்பத்தோடு கோவா சென்றிருந்தேன். அன்று மாலை டெல்லி வந்தபிறகுதான் விவரம்அறிந்தேன்.
மேலும் காங்கிரஸ் கட்சியில் எனக்கு பதவி இருந்தாலும் இல்லையென்றாலும், கட்சியை விட்டு ஒருபோதும் விலகமாட்டேன். காங்கிரஸ் தலைவருக்கும், எனக்கும் இடைவெளி உண்டாவதற்காக வேண்டுமென்றே சிலர் வதந்திபரப்பி விடுகிறார்கள் என்றார் மணி சங்கர அய்யர்.


Click it and Unblock the Notifications
