ஜஇந்தியாவை சூப்பர் பவராக்குங்கள்: வாஜ்பாய் வேண்டுகோள்
டெல்லி:
இந்தியாவை அறிவின் சூப்பர் பவராக மாற்ற வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் முன் வர வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் சனிக்கிழமை துவங்கிய வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் சர்வதேச 6-வது மாநாட்டின் துவக்க விழாவில் பிரதமர் வாஜ்பாய் மற்றும்மொரீஷியஸ் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் அனில் குமார் சிங் கயான் உள்ளிட்ட பலர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் 25 நாடுகளிலிருந்து 300-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் கலந்து கொண்டனர். இதில் பிரதமர்பேசியதாவது:
உலக அரங்கில் இந்தியர்களின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. எனவே 2010-ம் ஆண்டிற்குள் இந்தியாவை அறிவின் சூப்பர் பவராக்கவெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் முன்வர வேண்டும்.
பிஜியில் ஆட்சி நடத்தி வந்த இந்தியா வம்சாவளியைச் சேரந்த மகேந்திர சவுத்ரியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, அங்கு வாழ்ந்து வந்த இந்தியா வம்சாவளியைச்சேர்ந்தவர்கள் துன்புறுத்தப்பட்டதை கண்டு நாம் வருந்தினோம். அந் நாட்டில் 1997-ம் ஆண்டின் அரசியில் அமைப்புச் சட்டம் பின்பற்றப்பட வேண்டும் எனவற்புறுத்தி வருகிறோம்.
இந்தியா தகவல் தொழில் நுட்பம் மற்றும் விண்வெளி தொழில் நுட்பம் போன்றவற்றில் முன்னேற்றம் பெற்றுள்ளது. இந்தியாவில் ஐ.ஐ.டி.மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் படித்து பட்டம் பெறுபவர்கள் அயல் நாடுகளில் பணி புரியச் செல்கிறார்கள்.
அவர்கள் தாய் நாட்டிற்காகவும் பாடுபட வேண்டும். அதற்கான பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவில் முன்னேற்றம் சமுதாயமாற்றத்தை கொண்டு வரவேண்டும்.
வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர்களின் பிரச்னைகளை தீர்க்க எல்.எம். சிங்வி தலைமையில் உயர் மட்ட கமிட்டிஅமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தங்கள் பிரச்னைகளை தீர்த்துக் கொள்ளலாம் என கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications