வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கும் தென்னக ரயில்வே
கோவை:
தென்னக ரயில்வேயின் வர்த்தகம் கடந்த ஆண்டு 16 சதவீதம் உயர்ந்துள்ளது என தென்னக ரயில்வேயின் பொது மேலாளார் அஜித் கிஷோர் தெரிவித்தார்.
மேட்டுப்பாளையத்திலிருந்து சென்னை செல்லும் வழியில் கோவை ரயில்நிலையத்தில் நிருபர்களுக்கு அஜித் கிஷோர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
தென்னக ரயில்வே கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளது. மேலும் சரக்குகளைக் கையாளும் திறனும் அதிகரித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம்வரை பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மொத்த வர்த்தகத்தில் இது 16 சதவீத உயர்வடைந்துள்ளது. கடந்த நவம்பர் வரை முந்தைய ஆண்டை விட30 மில்லியன் டன் சரக்குகளை தென்னக ரயில்வே கூடுதலாகக் கையாண்டுள்ளது.
கடலூர் சேலத்திற்கு இடையே மீட்டர் கேஜ் ரயில்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியில் கடலூரிலிருந்து விழுப்புரம் வரையில் பாதைசீரமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
சுற்றுலா ரயில் விடுவதற்கான முழு அதிகாரம் தென்னக ரயில்வேயிடம் இல்லை. இதில் சுற்றுலாத் துறை முன் வரைவு தர வேண்டும். எனவேசுற்றுலா ரயில்விட சுற்றுலாத் துறைதான் பெரும் பங்கு வகிக்கிறது.
கோவை திருப்பதி இடையே விடப்பட்ட ரயிலை கால நீட்டிப்பு செய்வது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. பொதுமக்களுக்கு இந்த ரயில் நீண்ட காலபயனளிக்கும் என்றால், இதனை தொடர்வது குறித்து முடிவு செய்யப்படும்.
ரயில்வே கால அட்டவணையில் மாற்றங்கள் செய்வது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications