• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இலங்கை விழாவைக் கலக்கிய இந்திய யானை

By Staff
|
ஒரு வழியாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவு நிர்ணயிக்ப்பட்டிருக்கிறது. அடுத்த ஜனாதிபதியாக ஜார்ஜ் புஷ்பதவியேற்பார் என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது:

தேர்வாளர்கள் கூடி, அவரை தேர்ந்தெடுக்க வேண்டிய சடங்கு ஒன்றுதான் மீதமிருக்கிறது.

அதில் குழப்பம் நேரிடாமல் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில், ஜார்ஜ் புஷ்தான் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி என்றுஏற்று உலக நாடுகளும், அவருக்கு வாழ்த்து தெரிவித்து விட்டன.

நம்மைப் பொறுத்தவரையில் ஜார்ஜ் புஷ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, நல்லதுதான். அணு ஆயுத ஒப்பந்தம்,பொருளாதாரத் தடை போன்ற விஷயங்களில் புஷ்ஷின் அணுகுமுறை கடுமையாக இருக்காது என்றுஎதிர்பார்க்கலாம்.

இது தவிர, புஷ்ஷின் ரிபப்ளிகன் கட்சி, ஜனநாயகக் கட்சி போல சைனாவின் பக்கம் ஒரேயடியாகச் சாய்த்துவிடாது: இதுவும் இந்தியாவுக்கு நல்லதே.

பாகிஸ்தான் ஊக்குவிக்கும் பயங்கரவாதத்தை எதிர் கொள்வதிலும், இந்தியாவுக்கு புஷ்ஷின் ஒத்துழைப்புஅர்த்தமுள்ள வகையில் கிட்டக் கூடும். இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திஸ, க்ளிண்டன் காலத்தில் ஏற்பட்டஅமெரிக்க நல்லுறவை, இந்தியா மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் ஒன்று, மிகவும் சிக்கலாகி விட்ட தேர்தலில், சர்ச்சைக்குரிய வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாலும்,பாராளுமன்றத்தில் நூலிழை மெஜாரிட்டி பலமே இருப்பதாலும், புஷ்ஷின் செயல்பாடு சில கட்டுப்பாடுகளுக்குள்அடங்க வேண்டியிருக்கும்:

ஜனநாயகக் கட்சியினரையும் திருப்தி செய்து, அவர்களையும் அரவணைத்துச் சென்றால் தான், புஷ்ஷின் நிர்வாகம்சீராக இயங்கும். இந்த அவருடைய தேவையைப் புரிந்து கொண்டு, அமெரிக்காவுடனான நல்லுறவை இந்தியாஅணுக வேண்டும்.

இந்த நேரத்தில், அமெரிக்க தேர்தலை, நம் நாட்டுத் தேர்தலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது தவிர்க்க முடியாதது. அங்குநடப்பது போல், இங்கு நூலிழை முடிவு வந்தால் - என்ன நேரிட்டிருக்கும்? ஜாதி, பணம், மோசடி ... போன்றபலவற்றின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் மலிந்திருக்கும்: அனேமாக இரண்டு கும்பல்கள் ஒன்றை ஒன்றுதாக்கியிருக்கும்: மோதல்கள் நிகழ்ந்திருக்கும்.

அங்கும் பரஸ்பர குற்றச்சாட்டுகள் இருந்தன என்றாலும் - அடிதடி இல்லை. வம்புகளுக்கு குறைவில்லை என்றாலும்- வன்முறை இல்லை. வழக்குகள் குவிந்தன என்றாலும் - நீதிபதிகள் பெட்டி வாங்கி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டுஇல்லை. இதெல்லாம் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

அதே சமயத்தில், நாம் பெருமைப்பட்டுக் கொள்ளவும் இடமுண்டு. அமெரிக்க தேர்தல் குழப்பத்திற்கு அடிப்படைக்காரணம் என்ன? வாக்காளர்கள், வாக்குச் சீட்டில், வேட்பாளர் பெயருக்கு எதிராகக் குறிப்பிடப்பட்ட இடத்தைபஞ்ச் செய்ய வேண்டும். பல ஆயிரக்கணக்கான வாக்குச் சீட்டில் விழ வேண்டிய ஓட்டு, அரை குறையாக விழுந்தது.

அம்மாதிரி வாக்குகளை, எண்ணிக்கயிைல் சேர்க்க இயந்திரங்களினால் இயலவில்லை: ஆகையால் இயந்திரஎண்ணிக்கையை விட்டு, கையினால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என்று கோர் தரப்பு கோரியது: இது போக,வாக்குச் சீட்டில் வேட்பாளர்கள் பெயர் அச்சிடப்பட்ட விதமும், அவர்கள் பெயர்களுக்கு எதிராக பஞ்ச் ஆகவேண்டிய இடம் ஒதுக்கப்பட்ட விதமும், தெளிவாக இல்லாததால் - வாக்காளர்கள் குழம்பிப் போய் தவறாக பஞ்ச்செய்து விட்டார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இவற்றின் அடிப்படையில்தான் பல வழக்குகள் பதிவாகி, இறுதியில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் மூலம், சர்ச்சைக்குமுற்றுப்புள்ளி விழுந்தது.

ஆக, குழப்பத்தின் அடிப்படைக் காரணம், வாக்காளர்கள். ஒரு விஷயத்தை நினைத்துப் பார்ப்போம். நம் நாட்டுவாக்காளர்களில் பெரும்பாலானோர் படிப்பறிவு இல்லாதவர்கள்: வாக்குச் சீட்டில் உள்ள பெயரைக் கூட படிக்கமுடியாதவர்கள்: சின்னத்தைப் பார்த்து வாக்களிப்பவர்கள். ஆனாலும், அவர்கள் எவ்வளவு தெளிவாக தங்கள்வாக்குகளைப் பதிவு செய்கிறார்கள் என்று நினைத்து இச்சமயம், வியக்காமல் இருக்க முடியவில்லை.

சில சமயங்களில் வாக்குச் சீட்டில் 100 வேட்பாளர்கள் கூட இடம் பெறுகின்றன: கூட்டணி என்றால் புதிய புதியசின்னம் உடைய கட்சிகளும் இடம் பெறுகின்றன: தான் ஆதரிக்கிற கட்சியின் சின்னம் அல்லாமல், கூட்டணிக்கட்சியின் சின்னத்தைப் பார்த்து முத்திரை குத்த வேண்டிய நிலையில் வாக்காளர்கள் இருக்கிறார்கள்:

இன்னமும் டெலிவிஷன், நாட்டு மக்களில் பெரும்பான்மையினரைச் சென்று அடையவில்லை: இத்தனைஇடர்பாடுகள் இருந்தாலும், வாக்காளர்கள் தாஙகள் நினைத்தபடி தெளிவாக வாக்களிக்கிறார்கள். படித்தஅமெரிக்க வாக்காளரை விட, படிக்காத இந்திய வாக்காளர் காட்டுகிற தெளிவு வியப்புக்குரியது அல்லவா?

அதே போல, இவ்வளவு பெரிய நாட்டில் -போக்குவரத்தும், தகவல் தொடர்பும் அரைகுறையாக உள்ள நிலையில் -மத, ஜாதி துவேஷங்களை கிளறி விடுவதையே தொழிலாகக் கொண்ட அரசியல்வாதிகள் இயங்குகிற சூழ்நிலையில்- நமது தேர்தல் கமிஷன், தேர்தல்களை நடத்துவதில் காட்டுகிற திறனும் வியப்புக்குரியதே.

அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் கொஞ்சம் பொறுப்புணர்வையும், நியாயமான அணுகுமுறையையும்காட்டத் தொடங்கினால், நமது தேர்தல் முறை முழுமையான பெருமைக்குரியதாக அமைந்து விடும் என்பதில்சந்கேமில்லை. அமெரிக்க தேர்தல் நமக்கு அளிக்கிற ஆறுதல் இது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

lok-sabha-home

 
 
 

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more