பிஜியில் அரசியல் சட்டத்தை எதிர்த்து போர்க்கொடி
சுவா:
பிஜி தீவின் சட்டத்துறைக்கு எதிராக பல இனவாத அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதனால் அந்நாட்டில் 1997 ம் ஆண்டின் அரசியல்அமைப்பு சட்டத்தை செயல்படுத்துவது இயலாத காரியமாகியுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் பிஜியில் ஜார்ஜ் ஸ்பைட்டு தலைமையில் அந்நாட்டு பூர்வகுடி மக்கள், நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து ஆட்சியைக்கைப்பற்றினர். பிரதமர் மகேந்திர செளத்திரியை சிறைவைத்தனர்.
பின்னர் ராணுவத்திற்கும், கலகக் கும்பலுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி லைசெனியே தலைமையில் தற்காலிக அரசு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின்படி 1997 ம் ஆண்டின் அரசியல் அமைப்புச் சட்டம் மீண்டும் நாட்டில் பின்பற்றவேண்டும். பதவி விலகிய மகேந்திர செளத்திரி தலைமையில் மீண்டும் அரசு பதவிக்கு வர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிஜி தேசிய கட்சி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜார்ஜ் ஸ்பைட்டை விடுதலை செய்யுமாறும், 1997 ம் ஆண்டின்அரசியல் சட்டம் பின்பற்றப்பட்டால் கடந்த ஆண்டின் மே 19 ல் ஏற்பட்ட கலவரம் மீண்டும் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்குபல்வேறு அமைப்புக்கள் ஆதரவு அளித்துள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications