அரசியல் பின்னணியும், அயோத்தி விவகாரமும்
சென்னை:
அரசியல் பின்னணி இருக்கும் வரை அயோத்தி விவகாரத்திற்கு தீர்வு காண இயலாது என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள் கருத்துதெரிவித்துள்ளார்.
சென்னையில் ஜெயேந்திர சுவாமிகள் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
அலகபாத்தில் வரும் 13 ம் தேதி நடக்கும் கும்ப மேளாவில் நான் கலந்து கொள்கிறேன். இங்குள்ள திரிவேணி சங்கமத்தில் உலகில் உள்ள அனைத்து புண்ணியதீர்த்தங்களும் கலக்கின்றன என்பது ஐதீகம். மேலும் பிப்ரவரி 5 ம் தேதி நடக்கும் ராமேஸ்வரம் கோவில் கும்பாபிஷேகத்திலும் கலந்து கொள்ளஇருக்கிறேன்.
அயோத்தி பிரச்சனை தீர அரசியலில் இல்லாத இந்து - முஸ்லீம் பெரியவர்கள் ஒன்று கூடி பேச வேண்டும். அயோத்தி விவகாரத்தில் அரசியல் பின்னணிஇருக்கும் வரை இதற்குத் தீர்வு காண முடியாது. கோர்ட் தீர்ப்பு வந்தால் கூட இப்பிரச்சனைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க இயலாது.
தி.மு.க.மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வருவோம் என்று கூறுவதெல்லாம் ஓட்டுக்காகக் கூறப்படுவதாகும்.
காஞ்சிபுரம் அடுத்த பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிமடத்திற்கு சொந்தமான 100 ஏக்கர் நிலத்தில் காஞ்சி விஞ்ஞான் டிரஸ்ட் சார்பில் கம்ப்யூட்டர்சென்டர் அமைக்கப்பட உள்ளது. இது சென்னையில் உள்ள டைடல் பார்க் போன்று அனைத்து வசதிகளுடனும் இருக்கும் என்றார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications