காவல் நிலையங்களில் கைதிகள் சாவு குறைகிறது
கோவை:
மனித உரிமைப் பாதுகாப்பு நடவடிக்கையால், கடந்த ஆண்டுகளில் காவல்நிலையங்களில் கைதிகளின் சாவுகணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளது என தமிழக மனித உரிமைகள் மையம் மற்றும் சமூக நீதிக்கானகாவல்துறை ஐ.ஜி சியாம் சுந்தர் தெரிவித்தார்.
கோவையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
கடந்த பல ஆண்டுகளில் மனித உரிமை மற்றும் காவல்நிலையங்களில் கைதிகளைத் துன்புறுத்தும் நிலைமாற்றப்பட்டு வருகிறது. கைதிகளை அடித்து துன்புறுத்தக் கூடாது என காவல்துறையினருக்கு அறிவுரை கூறப்பட்டுவருகிறது. அதோடு சித்ரவதையில் இறங்கும் போலீசார் மீது துறை வாரியான நடவடிக்கை மட்டுமின்றி, கிரிமினல்வழக்கும் தொடரப்படுகிறது.
இதனால் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காவல்நிலைய கைதிகளின் சாவு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.கடந்த 96ம் ஆண்டு சராசரியாக 16 பேர் காவல்நிலையங்களில் போலீசாரால் துன்புறுத்தப்பட்டு இறந்துள்ளனர். 97ம் ஆண்டில் இது 12 ஆக குறைந்தது. 98ம் ஆண்ட 8 ஆகவும், 2000ம் ஆண்டில் இரண்டாகவும் இந்த சாவுகளின்எண்ணிக்கை குறைந்துள்ளது.
இதே போன்று அரசு பிரிவில் ஏற்படும் மனித உரிமை மீறல்களை இலாகாபூர்வமாக நடவடிக்கை மேற்கொள்ளஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த முறை விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, விழுப்புரம், தஞ்சாவூர் உட்பட 7 இடங்களில் இதற்கென டி.எஸ்.பி., க்கள்நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். காவல் துறையில் இருக்கும் இந்த சித்ரவதையைக்கண்காணிப்பு பணி மட்டுமல்லாது, சமுதாயத்தில் நடக்கும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இதன் முதல்கட்டமாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இழைக்கப்படும் தீண்டாமை பற்றியும், போலிச்சாதிச் சான்றிதழ் வழங்கப்படுவதையும் இந்த குழு கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளும்.
கடந்த பல ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக இக் குழு விசாரணை நடவடிக்கை மேற்கொண்டது.இதனால், இதுவரை ஒன்றரை கோடி ரூபாய் நிவராணம் வழங்கப்பட்டுள்ளது என்றார் ஐ.ஜி. சியாம் சுந்தர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications