போலீஸ் கமிஷனர் மீது புதிய தமிழகம் புகார்
சென்னை:
கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி அங்கு வைக்கப்பட்டிருந்த கட்சிப் பணம் ரூ 2 லட்சத்தையும் திருடிக்கொண்டதற்குப் பின்னணியில் சென்னை நகரப் போலீஸ் கமிஷனர் காளிமுத்து இருக்கிறார் என்று புதிய தமிழகம்கட்சியின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் அவர் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
ஜனவரி 6 ம் தேதி புதிய தமிழகம் கட்சி அலவகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து நாங்கள் போலீசில்புகார் கொடுத்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சென்னை நகர போலீஸ் கமிஷனர் காளிமுத்துவுக்கு திருடப்பட்ட பொருட்களும், பணமும் எங்குவைக்கப்பட்டிருக்கின்றன என்று தெரியும். ஆனால் அவர் அதுகுறித்து எதுவும் தெரியவில்லை என்று கூறிவருகிறார். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தையும், பொருட்களையும் போலீஸார் இதுவரை மீட்கவில்லை.
இந்தப் பணத்தை கமிஷனர் காளிமுத்து மீட்டுத்தரவில்லையென்றால் அவர் தனது சம்பளத்திலிருந்து பணத்தைக்கொடுக்க வேண்டும். நான் விரைவில் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து அவரிடம் இதுகுறித்துக்கூறவுள்ளேன்.
சென்னையில் போலீஸ் கமிஷனர் காளிமுத்துவை ஆதரித்தும், என்னை எதிர்த்தும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.இவ்விஷயத்தை புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்றார் கிருஷ்ணசாமி.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications