காசர்கோடைக் கேட்கிறது கர்நாடகம்
பெங்களூர்:
கர்நாடகத்துடன் காசர்கோடை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையிலான குழு பிரதமரைசந்திக்க முடிவெடுத்துள்ளது.
இதுதொடர்பாக கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவின் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கன்னட கவிஞர் கையரகியான்னராய், முதல்வர் கிருஷ்ணாவை சந்தித்துப் பேசினார். அப்போது கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு பகுதியில் கன்னடமொழி பேசும் மக்கள் அதிக அளவில் உள்ளனர்.
கன்னட கலாசாரமும் அதிக அளவில் உள்ளது. மேலும் காசர்கோடை கர்நாடகத்துடன் இணைக்க வேண்டும் என்பது கர்நாடகத்தின் நீண்ட நாள் கனவு ஆகும்.இதுதொடர்பாக பிரதமர் வாஜ்பாயை சந்தித்துப் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதை ஏற்றுக் கொண்ட முதல்வர் கிருஷ்ணா விரைவில் பிரதமர் வாஜ்பாயை சந்தித்துப் பேச ஒப்புதல் அளித்தார் என்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications