ஹெராயின் நாடாக மாறி வரும் தமிழகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தின் கடலூர், திருநெல்வேலி, கன்னியாக்குமரி மாவட்டங்கள், போதைப் பொருள் கடத்தல் கேந்திரமாகமாறி வருகின்றன.

திங்கள்கிழமை சென்னையில் ரூ. 2 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள பிடிபட்ட சம்பவத்தில்கைதான வெங்கடேசன் என்பவர் இதுதொடர்பாக போலீஸாரிடம் பல தகவல்களைக் கூறியுள்ளார்.

கடலூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். சென்னையில் கல்லூரி மாணவர்களிடம் போதைப் பொருள் விற்க இவர்முயன்றபோது அவரைப் போலீஸார் கைது செய்தனர். அரசியல் பின்பலத்துடன் பெரும் கும்பலே இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவது அவரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

கடந்த ஜனவரி 10-ம் தேதி தென் மாவட்டங்கள் பலவற்றில் சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில்,ஏராளமான அளவு ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இலங்கையைச்சேர்ந்த கதிரேசன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் 1983-ம் ஆண்டு முதல் எந்தவித அனுமதியும் இல்லாமல்இந்தியாவில் தங்கியுள்ளார்.

இந்தச் சோதனையின் இறுதியில் தெரிய வந்த விவரங்கள் சுங்கத் துறை அதிகாரிகளை பிரமிக்க வைத்தன.திருநெல்வேலியிலிருந்து, கன்னியாக்குமரி மாவட்டத்திற்கு ஹெராயின் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்குத்தகவல் கிடைத்தது. இதையடுத்து நாகர்கோவிலுக்கு விரைந்த சுங்கத் துறை அதிகாரிகள், அங்குள்ள லாட்ஜில்சோதனை போட்டனர். இது நடந்தது கடந்த திங்கள்கிழமையன்று.

லாட்ஜ் சோதனையில் 24 கிலோ எடையுள்ள 24 ஹெராயின் பாக்கெட்டுகள் கிடைத்தன. இதையடுத்து கதிரேசன்உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல கிடைத்த இன்னொரு தகவலின்படி, கன்னியாக்குமரி மாவட்டம் கூடப்புளி என்ற கடலோரக்கிராமத்தில் நடந்த சோதனையில், 10 பாக்கெட் ஹெராயின் பிடிபட்டது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகியநாடுகளிலிருந்து இந்தியாவுக்குக் கடத்தி வரப்பட்டுள்ளது இந்த ஹெராயின் பாக்கெட்டுகள்.

கூடப்புளி, சின்னமுட்டம் பகுதிகளிலிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு இது கடத்தப்படுவது வழக்கம் என்றும்விசாரணையில் தெரிய வந்தது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ. 3 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+