8 போதும், ஆளை விடுங்கள் .. எலிசபெத் டெய்லர்
வாஷிங்டன்:
8 கல்யாணம் செய்து கொண்டது போதும், ஆளை விடுங்கள் என்று கூறியிருக்கிறார் பிரபல இங்கிலாந்து நடிகைஎலிசபெத் டெய்லர்.
8 முறை திருமணம் செய்து அத்தனை பேரையும் விவாகரத்து செய்து புரட்சி செய்தவர் எலிசபெத் டெய்லர். 69வயதாகும் இந்த "கில்லாடி லேடி, சி.என்.என். டிவியில் கொடுத்த ஒரு பேட்டியில், இத்தனை கல்யாணம் செய்ததுபோதும் என்று கூறியிருக்கிறார்.
எலிசபெத் டெய்லரின் பேட்டியிலிருந்து சில பகுதிகள் ...
எனது 8 கணவர்களில் 2 பேரை மட்டும் என்னால் மறக்கவே முடியாது. ஒருவர் ரிச்சர்ட் பர்டன். (இவரை இரண்டுமுறை கல்யாணம் செய்து கொண்டு, இரண்டு முறையும் டைவோர்ஸ் செய்தார் டெய்லர்). இன்னொருவர்மைக்கேல் டோட். (இவர் திருமணமான 13 மாதங்களில் விமான விபத்தில் இறந்தார்.)
விர்ஜீனியா எம்.பி. ஜான் வார்னர் மீது எனக்கு இன்னும் பரிவு உண்டு. இவருடன் நான் சில காலம்தான்வாழ்ந்திருக்கிறேன். இருந்தாலும் இன்னும் பாசத்துடன்தான் இருக்கிறேன்.
என் மனதைக் கவராதவர்களில் முக்கியமானவர் குரூனர் எட்டி பிஷர். இவரை 1958-ம் ஆண்டு திருமணம்செய்தேன். அவரது மனைவி டெபி ரெனால்ட்ஸிடமிருந்து குரூனரை அபகரித்தேன். ஆனால் அவரது பெயரைக்கூட உச்சரிக்க இப்போது விரும்பவில்லை. (டெபி ரெனால்ட்ஸும், டெய்லரும் சேர்ந்து இபபோது ஒரு டிவி படம்எடுத்துள்ளார்கள். அடுத்த மாதம் இது ஒளிபரப்பாகவுள்ளது). அதெல்லாம் பழைய கதையாகி விட்டது இப்போது.
மீண்டும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். 8 போதும். இதில் உறுதியாக இருக்கிறேன். ஆனால் நகைச்சுவைஉணர்வு கொண்ட, நல்ல மனிதர் யாராவது கிடைத்தால் அவருடன் சேர்ந்து வாழ்வது குறித்து யோசிப்பேன்என்றார் எலிசபெத்.
செய்தாலும், செய்வார் எலிசபெத்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications