காங்கோ அதிபர் சுட்டுக் கொலை .. பெல்ஜியம் கூறுகிறது
பிரஸ்ஸல்ஸ்:
காங்கோ நாட்டின் அதிபர் லாரண்ட் கபிலா அவரது பாதுகாவலர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பெல்ஜியம்வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.
பெல்ஜியம் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் லூயிஸ் மைக்கேல் செவ்வாய்க்கிழமை மாலை இதுகுறித்துக்கூறுகையில், கபிலாவின் கொலை குறித்து நம்பகமான இரண்டு தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
கபிலாவின் பாதுகாவலர்களில் ஒருவரே அவரை சுட்டுக் கொன்றுள்ளார். அந்தப் பாதுகாவலரை சமீபத்தில்தான்கபிலா பதவியிலிருந்து நீக்கினார். இதனால் கோபம் கொண்ட அவர், ராணுவ ஜெனரல்கள் சூழ கபிலாஇருக்கையில் அவரை சுட்டுக் கொன்றார் என்றார்.
வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கோயன் வெர்வேயக் கூறுகையில், கபிலாவை அந்தப் பாதுகாவலர்இரண்டு முறை சுட்டார். இரண்டு குண்டுகள் பாய்ந்த நிலையில் கபிலா இறந்தார். இருப்பினும் இதுகுறித்து மேலும்தகவல்களை எதிர்பார்த்துக் கொண்டுள்ளோம். தற்போது காங்கோவில் குழப்பம் நிலவி வருகிறது என்றார் அவர்.
இதற்கிடையே, காங்கோ தலைநகர் கின்ஹாசாவில், அதிபருக்கு நெருக்கமான தகவல் தெரிவிக்கையில், கபிலாசுடப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.ஹெலிகாப்டர் மூலம் அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார் என்றும் அத்தகவல் தெரிவித்தது.
பெல்ஜியம் நாட்டுக்கான காங்கோ தூதர் கூறுகையில் கபிலா இறக்கவில்லை என்று செவ்வாய்க்கிழமை காலைதெரிவித்தார்.
பெல்ஜியம் ஆதிக்கத்தின் கீழ் இருந்த சயர் (இப்போது காங்கோ) நாட்டின் அதிபராக 1997-ம் ஆண்டு கபிலாபொறுப்பேற்றார். அப்போது பதவியில் இருந்த சர்வாதிகாரி மொபுடு சிசே சேகோவை, 7 மாத புரட்சிக்குப் பின்பதவியிலிருந்து அகற்றி விட்டு கபிலா அதிபரானார். அவருக்க ருவாண்டா, உகாண்டா ஆகிய நாடுகள் ஆதரவுகொடுத்தன.
ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே அவரது ஆதரவாளர்கள் பலர் கபிலாவுக்கு எதிராக திரும்பினர்.தீவிரவாதிகளுடன் சேர்ந்து கொண்டு கபிலாவுக்கு எதிராக போராடி வந்தனர். இந்தத் தீவிரவாதிகள் தற்போதுகாங்கோவின் வடக்குப் பகுதிகள் மற்றம் கிழக்குப் பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications