சென்னையில் மிஸ்-இந்தியா சுற்றுப் போட்டி
சென்னை:
மிஸ் இந்தியா - 2001 முதல் சுற்று போட்டி செவ்வாய்கிழமை சென்னையில்துவங்கியது.
ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவில் அழகிப் போட்டி நடைபெற்று இந்தியாவின்சிறந்த அழகி தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு அந்த ஆண்டிற்கான இந்திய அழகி(மிஸ் இந்தியா) என்ற பட்டம் வழங்கப்படும்.
இந்த ஆண்டிற்கான மிஸ் இந்தியா - 2001 போட்டியின் முதல் சுற்று சென்னையில்செவ்வாய்கிழமை துவங்கியது. இந்த போட்டி விமான தள அரங்கில் நடந்தது.போட்டிஆடல்,பாடல், துள்ளலுல் என எங்கும் இளமை ததும்ப கோலாகலமாகதுவங்கியது.
இதற்காக அரங்கம் வனம் போல் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பிரபல டிரம்ஸ் கலைஞர்சிவமணியின் டிரம்சுடன் போட்டி துவங்கியது. இந்த போட்டியில் கலந்து கொள்ளஇந்தியா முழுவதிலிருந்தும் மொத்தம் 30 அழகிகள் கலந்து கொண்டனர்.
அழகிகள் அனைவரும் விதவிதமான கண்கவர் உடைகளில் ஆடை அணிந்துகேட்வாக் செய்தனர். அழகான உடலமைப்பு, அழகான சிரிப்பு, அழகான மேனி எனதனித்தனியாக அழகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சென்னை எதிராஜ் கல்லூரியைச் சேர்ந்த மாணவி திரிஷா சிறந்த சிரிப்பழகி பட்டத்தைவென்றார். அழகான உடல் அமைப்புக்காக ரோசி என்பவரும், அழகான மேனிக்காகசெலினா என்பவரும், அழகான எழிலுக்காக பிலவியா என்பவரும்தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
போட்டியில் வென்ற அழகிகளுக்கு 2000-ம் ஆண்டின் ஆசியா - பசிபிக் அழகியானதியா மிர்ஸா கீரிடம் சூட்டி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் உலக அழகி பிரியங்காசோப்ரா கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
மிஸ் இந்தியா 2001 -ன் இரண்டாவது கட்ட போட்டி இந்த மாதம் 18-ம் தேதிபெங்களூரிலும், இறுதி கட்டப் போட்டி மும்பையில் இந்த மாதம் 27-ம் தேதியும்நடைபெறுகிறது.
-
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications