கூட்டணி யாருடன் .. விவாதிக்க கூடுகிறது த.மா.கா.
சென்னை:
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டம்வியாழக்கிழமை மாலை கூடுகிறது.
அரசியல் விவகாரக் குழுக் கூட்டம் கட்சித் தலைவர் ஜி. கருப்பையா மூப்பனார் தலைமையில் கூடுகிறது. கூட்டத்தில்மத்திய முன்னாள் அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
மாநில நிர்வாகிகளுக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. காங்கிரசுடன்தான்த.மா.கா. கூட்டணி என்று கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் ஏற்கனவே மூப்பனார் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அ.தி.மு.க.வுடன் கூட்டணி உண்டா என்பது குறித்தும், ஆட்சியில் பங்கு கேட்கும் எண்ணம்இருக்கிறதா என்பது குறித்தும் அரசியல் விவகாரக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.இதுதவிர, மூன்றாவது அணி அமைப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையே, கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் விரும்பவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி என்பதுஏற்கனவே முடிவாகி விட்டது. காங்கிரசாரிடம் கூட்டணி குறித்துப் பேசப்படும். த.மா.கா. கூட்டணியில்இடம்பெறுமா என்பது குறித்து மூப்பனாரிடம்தான் கேட்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
இந்தநிலையில் வியாழக்கிழமை மாலை நடைபெறும் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்என்று தெரிகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications