போபர்ஸ் வழக்கு: இந்துஜா சகோதரர்களுக்கு ஜாமீன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

போபர்ஸ் பீரங்கி வழக்கில் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட இந்துஜாசகோதரர்கள் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது பீரங்கி வாங்கியதில் ஊழல் நடந்தததாக குற்றம்சாட்டப்பட்டது. அதில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி முதல் குற்றவாளியாகசேர்க்கப்பட்டிருந்தார்.

இந்துஜா சகோதரர்கள் 1986-ம் ஆண்டு பீரங்கி வாங்கியதில் ஸ்வீடனின் ஏபிபோபர்சிடமிருந்து இவர்கள் ரூ 81 மில்லியன் லஞ்சம் வாங்கியதாக 1999-ம் ஆண்டுஅக்டோபர் மாதம் 9-ம் தேதி குற்றம் சாட்டப்பட்டனர்.

இவர்கள் மீது இந்திய குற்றப்பிரிவு 120-பி ( சதித்திட்டம்), 420 (ஏமாற்றுதல்) மற்றும்ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இத்தாலியாவைச் சேர்ந்த ஒட்டோவியோ குவாத்ரோச்சியும், முன்னாள்போபர்ஸ் ஏஜென்ட் வின் சத்தா, முன்னாள் பாது காப்பு செயலாளர் பட்நாகர்,முன்னாள் போபர்ஸ் தலைவர் மார்ட்டின் அர்ட்போவும் குற்றம் சாட்டப்பட்டனர்.

இந்துஜா சகோதரர்கள் கைது செய்யப்படக்கூடாது என அவர்கள் சார்பில்அவர்களுடைய வக்கீல் வாதாடினார். ஆனால் அவர்கள் தேவைப்படும் போதுகோர்ட்டில் ஆஜராவார்கள் என உறுதியளித்தார்.

போபர்ஸ் வழக்கில் ஊழல் நடந்ததற்கும் இவர்களுக்கும் எந்த விதமான சம்பந்தமும்கிடையாது என அவர்களது வழக்கறிஞர் வாதாடினார்.

வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்ட நீதிபதி அஜித் பாரிஹோக் இந்த வழக்கிற்கானஉத்தரவை பிற்பகல் 3.30 மணி வரை ஒத்தி வைத்தார்.

உணவு இடைவேளைக்கு பின் வந்த நீதிபதி இந்துஜா சகோதர்களுக்கு ஜாமீன் வழங்கிதீர்ப்பு வழங்கினார். சி.பி.ஐ. வழக்கறிஞர் இவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாதுஎன்றுவாதிட்டதை நீதிபதி நிராகரித்தார்.

ஆனாலும் அவர்கள் நீதிமன்ற அனுமதி பெறாமல் இந்தியாவைவிட்டு செல்லக்கூடாதுஎன கூறினார்.

மூன்று சகோதரர்களும் ரூ 2 லட்சம் சொந்த ஜாமீனும் அதே தொகைக்கு தனி நபர்ஜாமீனும் அளிக்க வேண்டும் என கூறினார்.

இந்துஜா சகோதரர்கள் வெள்ளிக்கிழமை அமெரிக்காவுக்கு செல்ல உத்தரவளிக்கவேண்டும் என்ற மனு சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு எடுத்துக் கொள்ளப்படும்என்றார் நீதிபதி

இந்துஜா சகோதர்கள் அமெரிக்கா செல்ல வேண்டும் ஏனென்றால் அவர்களுக்குசனிக்கிழமை அமெரிக்காவில் முக்கியமான பணி உள்ளது என அவரது வக்கீல்கள்கேட்டபோது, வாய் வழியாக கேட்டபவற்றிற்கு உத்தவளிக்க முடியாது எழுத்து மூலம்கோரிக்கை விடுக்க வேண்டும் என நீதிபதி கூறியதும் இந்துஜாவின் வக்கீல்கள்விரைவாக கோரிக்கை எழுதி கொடுத்தனர்.

இதை நீதிபதி சி.பி.ஐ. படித்து ஒப்புக்கொண்ட பின்பே அனுமதி கொடுக்க முடியும் எனகூறினார். வழக்கை இந்த மாதம் 30-ம் தேதி நீதிபதி ஒத்தி வைத்தார்.

பின்னர் வெளியே வந்தபோது, தாங்கள் கும்பமேளாவில் புனித நீராட இருப்பதாக ஸ்ரீசந்த் இந்துஜா கூறினார். அப்போது அங்கிருந்த நிருபர் ஒருவர் கும்பமேளாவில்குளிப்பதால் என்ன பயன் என கேட்கவும் கோபமடைந்த ஸ்ரீசந்த் புனித நீராடல் மூலம்10,000 மடங்கு சக்தி பெறலாம் என அறிவியல் மூலமாக கூறப்பட்டிருக்கிறதுகோபமாக பதிலளித்தார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+