தலித் பெண்கள் கொலை .. போலீஸ் மீது புகார்
சென்னை:
திருவள்ளூர் மாவட்டத்தில், கள்ளச் சாராயத்தை எதிர்த்து போராடிய இரண்டு தலித்பெண்கள் கொல்லபட்ட சம்பவத்தில் போலீசாருக்கும், கள்ளச்சாராயம்காயச்சுபவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணைக் குழு விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்ற மாதம் 6-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை எதிர்த்துபோராடிய பெண்கள் சங்கத்தை சேர்ந்த இரண்டு தலித் பெண்கள் கள்ளச்சாராயகும்பலால் கொல்லப்பட்டனர்.
இது குறித்து விசாரிக்க 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது ஒருங்கிணைந்த ஊரகவளர்ச்சி கழகத்தின் தலைவர் ஜீவாவும், கரூரைச் சேர்ந்த "ஸ்வாதே என்ற தன்னார்வத்தொண்டு நிறுவனத் தலைவர் கிறிஸ்டி சுவாமியும் விசாரணை நடத்தினர்.
விசாரணை முடிவில் அவர்கள் தெரிவித்துள்ளாவது:
கொல்லப்பட்ட இந்திராவின் தாய் யசோதாவை போலீசார் பொய் புகார்கொடுக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். இந்திரா குடும்பத் தகராறு காரணமாகவோஅல்லது நிலத் தகராறு காரணமாவோதான் கொலை செய்யப்பட்டார் என கூறுமாறுயசோதாவை வற்புறுத்தியுள்ளனர்.
யசோதாவை சம்பவ இடத்திற்கு எந்த விதமான பாதுகாப்பும் இல்லாமல் போலீஸார்அழைத்துச் சென்றுள்ளனர். இது விதிகளுக்கு புறம்பானது.
இந்த சம்பவம் குறித்து முதல்வர் கருணாநிதி எந்த விதமான கண்டனமும்தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
இந்த உண்மை அறியும் குழுவில் மனித உரிமை கழகத்தைச் சேர்ந்த இரு பெண்வக்கீல்களும் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தில் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர்களான பாபு, நாகராஜன் உள்ளிட்ட16 பேர் இதுவரைக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications