பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முன்னிலை
சென்னை:
பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 9 சதவீத வளர்ச்சியை இந்தியா அடைய வேண்டுமெனறால், தமிழகம் போன்ற பொருளாதார வளர்ச்சி அடைந்தமாநிலங்கள் மேலும் அதிக வேகத்தில் பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என்று மத்திய திட்டக் கமிஷன் உறுப்பினர் மான்டெக் சிங்ஆஅலுவாலியா சனிக்கிழமை தெரிவித்தார்.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆராயும்படி ஹார்வேர்டு பல்கலைக்கழக ஆய்வுக்குழுவினரை தமிழக அரசு கேட்டுக் கொண்டது.இதுதொடர்பாக வழங்கப்பட்ட அறிக்கை குறித்து, சென்னையில் கருத்தரங்கம் நடந்தது.
இதில் அலுவாலியா பேசியதாவது:
ஐந்தாண்டு திட்டம் மூலம் இந்தியா நல்ல வளர்ச்சியடைந்துள்ளது. வேறு எந்த நாடும் இதுபோல் வளர்ச்சியடைந்ததில்லை. மிக வேகமாக வளர்ச்சியடைந்துவரும் தமிழகம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய நாடுகள் இன்னும் அதிகமாக வளர்ச்சியடைந்து வந்தால் இந்தியாவின் குறிக்கோளான 9சதவீத வளர்ச்சியை எட்டி விட முடியும்.
10 வது ஐந்தாண்டுத் திட்டத்தில் 9 சதவீத வளர்ச்சியை இந்திய அடைய வேண்டும் என்று வாஜ்பாய் கூறியுள்ளார்.
இந்தியாவில் 8 மாநிலங்கள் மிகவும் வேகமாக பொருளாதார நிலையில் வளர்ச்சி அடைந்து வருகின்றன. ஆனால் உத்தரப்பிரதேசத்தில் வளர்ச்சி 3 சதவீதம்மட்டுமே உள்ளது. பிகாரில் 3 சதவீதத்துக்கும் குறைவான வளர்ச்சி உள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் முன்னேறிய மூன்று மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் உள்ளது. மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் பொருளாதாரவளர்ச்சி 8 சதவீதமாக உள்ளது. இரண்டாவது இடத்தில் வரும் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக உள்ளது என்றார்.
இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்ட முதல்வர் கருணாநிதி, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்த 14 தொகுதிகள் அடங்கிய அறிக்கைகளைவெளியிட்டார்.
அதில் 1995 முதல் 2000 மாவது ஆண்டு வரை முதலீடு செய்வதில் ஐந்தாவது இடத்தில் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. சாலை சீரமைப்பு, மின்சாரம், குடிநீர்விநியோகத்தில் தமிழகம் நல்ல வளர்ச்சியடைந்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் வெறும் 37 கோடியாக இருந்த ஏற்றுமதி 1999 - 2000மாவது ஆண்டுகளில் 1914 கோடியாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது என்றார்.
இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்ட மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறன் பேசுகையில், இந்தியாவில் பல வடகிழக்கு மாநிலங்கள் பலமிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. மத்திய அரசு அந்த மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவி செய்ய வேண்டும்.
மின்சார உற்பத்தியில் தமிழகம் மிக அமைதியான முறையில் பல சாதனைகளைப் புரிந்து வருகிறது. மேலும் இந்தியாவில் தமிழகத்தில் அதிக அளவு வெளிநாட்டுநேரடி முதலீடுகளும் செய்யப்படுகின்றன என்றார் மாறன்.
யு.என்.ஐ.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications