எம்.எல்.ஏவுக்கு அஞ்சலி .. சட்டசபை ஒத்திவைப்பு
சென்னை:
மயிலாடுதுறை எம்.எல்.ஏ. அபுல் ஹசனின் மறைவுக்கு மெளன அஞ்சலி செலுத்தி விட்டு தமிழக சட்டசபைசனிக்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.
அபுல் ஹசன் 1991 ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் மயிலாடுதுறை எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதற்குப்பின் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் அதே தொகுதியில் 1996 ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றுஎம்.எல்.ஏ.வாகப் பதவி வகித்து வந்தார்.
சனிக்கிழமை தமிழக சட்டசபை கூடியதும் முதலில், மறைந்த அபுல் ஹசனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர்சட்டசபையில் இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தில் அபுல் ஹசன் மறைவுக்கு அதிர்ச்சிதெரிவிப்பதாகக் கூறப்பட்டிருந்தது.
இரங்கல் தீர்மானம் மீதான விவாதத்தைத் துவக்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசுகையில், ஹசன் ஈடுஇணையில்லாத மனிதர். எனது நீண்ட கால தோழர் மட்டுமின்றி நீண்ட காலமாக பொதுவாழ்வில் ஈடுபட்டுவந்தவர்.
எதிர்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த அவர், யாருடைய மனதும் புண்படும்படி நடந்து கொண்டது கிடையாதுஎன்றார்.
பல்வேறு கட்சிகளும் உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்துப் பேசினர். கல்வி அமைச்சர் அன்பழகன், எம்.எல்.ஏ.அபுல் ஹசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். சபையில் மறைந்த எம்.எல்.ஏ.க்கள் குப்புசாமி, சோனியா,சின்னசாமி, குமாரசாமி ஆகியோருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் லட்சுமணன், பழனிசாமி, (சிபிஐ), சுந்தரம் (அதிமுக), கணேசன் (பாமக), அப்துல்லத்தீப் ( இந்திய தேசிய லீக்), ஹேம சந்திரன் ( சிபிஐ எம்), வேலாயுதம் ( பாஜக), பேராசிரியர் தீரன் (சுயேச்சை)ஆகியோரும் இரங்கல் தெரிவித்தனர்.
இறுதியில் அபுல் ஹசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் சபையை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications