எத்தனை தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க.?
கோவை:
தேர்தல் நேரத்தில்தான், எத்தனை சட்டசபைத் தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பதுபற்றி முடிவு செய்வோம் என கோவையில் பேசிய மறுமலர்ச்சி திமுக தலைவர் வைகோதெரிவித்தார்.
கோவை ஜி.ஆர்.டி கலை அறிவியல் கல்லூரியில் நடந்த விழாவில் வைகோ கலந்துகொண்டார். அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
விஷ்வ இந்து பரிஷத் ஓராண்டில் பிரச்னைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவோம்என அறிவித்துள்ளனர். ஆனால், அவ்வாறு பிரச்னைக்குரிய இடத்தில் கோயில் கட்ட இந்தஅரசு அனுமதிக்காது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் செயல் திட்டத்தில் பிரச்னைக்குரிய இடத்தில் ராமர்கோயில் கட்டக் கூடாது என கூறப்பட்டுள்ளது. எனவே, இது விஷ்வ இந்து பரிஷத்தின்அறிவிப்பு மட்டுமே.
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அதை ஒரு அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.அப்போதே நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம். இப்போதுள்ள அரசு, பிரச்னைக்குரியஇடத்தில் கோயில் கட்டுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிராது.
காஷ்மீரில் பரூக் அப்துல்லாவைக் கொல்ல நடந்த முயிற்சியினால், தீவிரவாதத்ததிற்குபாகிஸ்தான் உதவி வருவது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பெரிய கட்சியான பாரதிய ஜனதா, வரும்சட்டசபைத் தேர்தலில் 60 இடங்களில் போட்டியிடுவது எனக் கூறுவது அவர்களது உரிமை.இது பற்றி விமர்சனம் செய்ய வேண்டியதில்லை.
தேர்தல் நேரத்தில், எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது பற்றி நாங்கள் முடிவுசெய்வோம்.
மேற்கு வங்காளத்தில் நடக்கும் ஆட்சியைக் கலைக்கச் சொல்லத் தேவையில்லை. வரும்தேர்தலில் அங்கு கம்யூனிட் கட்சியைப் பொதுமக்களே தூக்கி எறிந்து விடுவர் எனக்கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications