ஆர்.வி. தலைமையில் வாழப்பாடி மகன் திருமணம்
சேலம்:
முன்னாள் மத்திய மந்திரியும், தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவருமான வாழப்பாடிராமமூர்த்தியின் மகன் திருமணத்தை முன்னாள் ஜனாதிபதி ஆர் வெங்கட்ராமன் நடத்திவைத்தார்.
தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி - கலைமணி தம்பதியரின்மகன் கர்ணன். இவருக்கும் காஞ்சிபுரம் மாவட்டம் மவுலிவாக்கம் பழனி - ராணிதம்பதியரின் மகள் லலிதாவுக்கும சேலத்திலிருக்கும் ரத்தினவேல் கவுண்டர் திருமணமண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது,.
இந்த திருமணம் சீர்திருத்த முறையில் நடந்ததது. தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள்தலைவர் எம்.பி.சுப்ரமணியம் தலைமை வகித்தார். பாராளுமன்ற துணை சபாநாயகர்சயீத், தமிழக வேளாண்மைதுறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.
திருமண விழாவில் முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன் மங்கல நாணைஎடுத்துக் கொடுக்க அதை மணமகன் கர்ணன் மணமகள் லலிதாவுக்கு அணிவித்தார்.
இதன் பின் ஆர் வெங்கட்ராமன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், செஞ்சிராமச்சந்திரன்,பாராளுமன்ற துணை சபாநாயகர் சயீத்.வீரபாண்டி ஆறுமுகம், தமிழ்பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் தீரன் உள்ளிட்ட பல தலைவர்கள் மணமக்களைவாழ்த்தி பேசினர்.
திருமண விழாவையொட்டி ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன், துணை ஜனாதிபதிகிருஷ்ணகாந்த், பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி, அகில இந்தியகாங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, பா.ஜ.க. தலைவர் பஙகாரு லட்சுமணன்,விஞ்ஞானி அப்துல் கலாம் ஆகியோர் மணமக்களுக்கு வாழ்த்து செய்திஅனுப்பியிருந்தனர்.
வாழப்பாடி ராமூர்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார், தண்டாயுதபாணி நன்றிகூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications