எழுத்தாளர் சாவி கவலைக்கிடம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவன்று மயங்கி விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள எழுத்தாளர் சாவியின் உடல்நிலை தொடர்ந்துகவலைக்கிடமாக உள்ளது.
சென்னையில் சனிக்கிழமை மாலை சாவியின் 85-வது பிறந்த நாள் விழாவும், அவரது வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் சாவி 85 என்ற பெயரில்ராணி மைந்தன் என்பவர் எழுதிய நூல் வெளியீட்டு விழாவும் நடந்தது.
இந்த விழாவின்போது உரையாற்ற வந்த சாவி நெஞ்சுவலியால் மைக்கைப் பிடித்தபடியே கீழே விழுந்தார். இதையடுத்து அவர் உடனடியாக அப்பல்லோமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாகஉள்ளது.












Click it and Unblock the Notifications